நம்பமுடியாத பணியை பிரதமர் மோடி இந்தியாவில் செய்திருக்கிறார் : ஜெமி டைமன்

இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி ‘நம்பமுடியாத பணியை’ செய்திருப்பதாகவும் ‘அமெரிக்காவில் இதில் கொஞ்சம் நாம் செய்வது அவசியம்’ என்றும் ஜேபி மோர்கன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேமி டைமன் கூறியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி அரசின் செயல்பாடு குறித்து ஜேபி மோர்கன் சேஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜேமி டைமன் பாராட்டியுள்ளார். இந்தியாவுக்கு “நம்பமுடியாத கல்வி முறையையும், அடிப்படைக் கட்டமைப்பையும்” பிரதமர் தந்திருப்பது “நம்பமுடியாத பணி” என்று அவர் கூறியுள்ளார். “இதில் சிறிதாவது” அமெரிக்காவில் செய்யவேண்டிய தேவை உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நியூயார்க்கில் செவ்வாயன்று பொருளாதார மன்றத்தால்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய ஜேமி டைமன், “இந்தியாவில் நம்பமுடியாத பணியை  மோடி செய்திருக்கிறார்… 400 மில்லியன் மக்களை வறுமையில் இருந்து அவர் மீட்டுள்ளார். நாம் மோடியைப் பற்றி நிறைய பேசலாம்… 400 மில்லியன் மக்கள் கழிப்பறை வசதி பெற்றிருக்கிறார்கள். இவையெல்லாம் எவ்வாறு செய்யப்பட்டன என்பது பற்றி நாம் விரிவாக பேசவேண்டும்” என்றார்.

இந்தியாவில் 700 மில்லியன் மக்கள் வங்கிக் கணக்கைத் தொடங்கியிருப்பதாகவும்  அவர் கூறினார். இதன் மூலம் பணப்பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. “அவர்கள் (இந்தியா) நம்பமுடியாத கல்வி முறையைக் கொண்டிருக்கிறார்கள். நம்பமுடியாத அடிப்படைக் கட்டமைப்பைப் பெற்றுள்ளனர். அவர்கள் ஒரு மனிதரின் (பிரதமர் மோடி) உறுதி காரணமாக ஒட்டுமொத்த தேசத்தையும் முன்னேற்றியிருக்கிறார்கள்”.

பழமையான அதிகார வர்க்க நடைமுறைகளை உடைத்ததால் மோடியை “உறுதிபடைத்தவர்”  என்று அவர் அழைத்ததோடு, “அதேபோல், ஒரு சிலவற்றை இங்கு (அமெரிக்காவில்) நாம் செய்வது அவசியம்” என்றார்.

“ஒவ்வொரு குடிமகனும் கை ரேகை அல்லது கருவிழி அல்லது விரலால் அங்கீகரிக்கப்படுகிறார். 700 மில்லியன் மக்களுக்கு அவர்கள் வங்கிக் கணக்கை வைத்திருக்கிறார்கள். இதன் மூலம் அவர்களின் பணப்பரிவர்த்தனை நடைபெறுகிறது” என்று டைமன் கூறினார். இவர் 18 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவின் மிகப்பெரிய நிதி நிறுவனராக  இருப்பவர்.

அமெரிக்கா பற்றி குறிப்பிட்ட டைமன், தேசத்தின் கடன், பணவீக்கம், புவிசார் அரசியல்  மோதல்கள் பொருளாதாரத்தில்  தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுத்தார். பணவீக்கத்தோடு, மிக அதிகமான வட்டி விகிதங்கள் எதிர்பார்த்ததை விட, அதிக காலம்   நீடிக்கலாம் என்றும் அவர் கூறினார்.

நிதி நிறுவனர்களுக்கும் (கடன் கொடுப்பவர்களுக்கும்) முறைப்படுத்துவோருக்கும் இடையே கூடுதலான நல்லிணக்கம் இருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்த அவர், அனைவரையும் உள்ளடக்கிய  பொருளாதார வளர்ச்சி அவசியம் என்றார். அமெரிக்க ராணுவ பலம், அரசியல் அணி திரட்டல், தேசத்தின் பொருளாதார செயல்பாடு போன்ற விஷயங்கள் இதர நாடுகளுடன்  ஒப்பிடப்பட வேண்டும் என்றும் டைமன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.