நரிக்குறவர்களை அனுமதிக்காதது ஏன்?… திரையரங்க நிர்வாகம் அளித்த விளக்கம்

சென்னை:
நடிகர் சிம்பு கதாநாயகனாக நடித்த பத்து தல’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. சென்னை கோயம்பேடு பகுதியிலுள்ள ரோகிணி திரையரங்கில், சிறுமி உட்பட நரிக்குறவர் பெண்கள் சிலர், சிம்புவின் திரைப்படத்தைப் பார்க்க ரோகிணி திரையரங்குக்குச் சென்றிருக்கின்றனர். பின்னர், அவர்கள் டிக்கெட் வாங்கிக்கொண்டு திரையரங்குக்குள் செல்ல முயன்றனர். அப்போது அவர்களைத் திரையரங்குக்குள் ஊழியர்கள் அனுமதிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. அதனால் டிக்கெட்டுடன் அவர்கள் வெளியில் காத்திருந்தனர். இந்தச் சம்பவத்தைப் பார்த்த படம் பார்க்க வந்தவர்களில் ஒருவர், தன்னுடைய செல்போனில் வீடியோவாக எடுத்தார். அப்போது ஒருவர்,டிக்கெட் இருந்தால் உள்ளே அனுமதிக்க வேண்டியதுதானே?’ என்று திரையரங்கு ஊழியரிடம் கேட்கிறார். ஆனால், அவரோ அமைதியாக இருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதும், கோயம்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணா தலைமையிலான போலீஸார் உடனடியாக திரையரங்குக்குச் சென்று விசாரித்தனர்.
விசாரணையில், ரசிகர் மன்றம் சார்பில் இலவசமாக டிக்கெட் சிலருக்கு விநியோகிக்கப்பட்டிருக்கிறது. அதைக் கொண்டு அவர்கள் அங்கு வந்திருக்கிறார்கள். டிக்கெட்டுகளுடன் காத்திருந்தவர்களுக்கு சிலர் ஆதரவாகப் பேசியதையடுத்து, அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு படம் பார்த்துவிட்டுச் சென்றது தெரியவந்தது.
இந்தச் சம்பவம் சர்ச்சையானதையடுத்து ரோகிணி திரையரங்க நிர்வாகம், “யூ/ஏ திரைப்படம் என்பதால் சிறுமியுடன் வந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது” என்று விளக்கமளித்திருக்கிறது. போலீஸாரும் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.