சென்னை:
திமுகவின் ஊழல் பட்டியல் நாளை காலை 10.15 மணிக்கு வெளியிடப்படும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திமுகவின் இந்த ஆட்சிக்காலம் மட்டுமல்லாமல், கடந்த ஆட்சிக் கால ஊழல் பட்டியலும் சேர்த்து ஏப்ரல் 14-ம் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கெனவே அண்ணாமலை தெரிவித்திருந்தார். மேலும், ஏப்ரல் 14-ம் தேதி வெளியிடப்படும் பட்டியல் எந்தளவு அதிர்ச்சியாக இருக்கப் போகிறது என்பது அனைவருக்கும் தெரியத்தான் போகிறது. 2ஜி ஊழல் விசாரணையைக் கூட துரிதப்படுத்தி உள்ளோம் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.
இதன்படி நாளை (ஏப்ரல் 14) காலை 10.15 மணிக்கு இந்தப் பட்டியல் வெளியிடப்படும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,” திமுக பைல்ஸ். நாளை காலை 10.15 மணி” என்று தெரிவித்துள்ளார். அத்துடன் ஒரு சிறிய ப்ரோமோ வீடியோவும் இணைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் மாசு முன்னிலையில் த.வெ.க. நிர்வாகிகள் 50 பேர் திமுகவில் இணைந்தனர்
முன்னாள் அமைச்சர் மாசு முன்னிலையில் த.வெ.க. நிர்வாகிகள் 50 பேர் திமுகவில் இணைந்தனர்






