பார்சல் கட்ட தாமதமானதால் ஓட்டல் உரிமையாளரின் கை விரலை கடித்து துப்பிய வாடிக்கையாளர்

ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் பார்சல் கட்ட தாமதம் ஆனதால் உணவக உரிமையாளரின் விரலை கடித்து துப்பிய வாடிக்கையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேரூராட்சி அலுவலுகம் அருகே ஓட்டல் கடை நடத்தி வருபவர் கதிரேசன் (50). இவரது கடைக்கு அதிக அளவில் வாடிக்கையாளர்கள் வந்து உணவருந்திச் செல்வது வழக்கம். இதனால் எந்த நேரமும் இவரது கடையில் கூட்டம் அலைமோதிக் கொண்டு இருக்கும். இவரது கடையில் வேலையாட்கள் யாரும் வைத்துக் கொள்ளாமல் இவரே வேலை செய்து வருகிறார். இதனால் கதிரேசனே அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார்.
இந்நிலையில், முஷ்டகுறிச்சியைச் சேர்ந்த வழிவிட்டான் (45) என்பவர் கதிரேசன் ஓட்டலுக்கு வந்து பார்சல் சாப்பாடு கேட்டுள்ளார். சற்று தாமதமாகும் என்று கதிரேசன் கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த வழிவிட்டான் அருகில் இருக்கும் சமையல் கரண்டியால் கதிரேசனை தலையில் பயங்கரமாக அடித்துள்ளார்.
மேலும், கதிரேசனின் இடது கையின் ஆள்காட்டி விரலை கடித்தார். இதில் அவரது விரல் துண்டானது. துண்டான விரலை ஓட்டலுக்கு முன்பு உள்ள கழிவுநீர் கால்வாயிலே வழிவிட்டான் துப்பி விட்டு அங்கிருந்து தப்பியோடினார். இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர். கதிரேசனின் துண்டான ஆள்காட்டி விரலின் தேடிப்பார்த்தனர். ஆனால் விரல் கிடைக்கவில்லை.
இதையடுத்து, வலியில் துடிதுடித்த கதிரேசனை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் கதிரேசன் புகார் அளித்தார். புகாரின்பேரில் கை விரலை கடித்து துப்பிய வழிவிட்டானை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.