பாலியல் புகாரில் கைதான குமரி பாதிரியாரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாலியல் புகாரில் சிக்கி உள்ள பாதிரியார் பெனடிக் ஆன்றோவை மேலும் ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ (வயது 29). இவர் பேச்சிப்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள சர்ச்சுகளில் பாதிரியாராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஓராண்டுக்கு முன்பு தக்கலை அருகே உள்ள பிலாங்காலை சர்ச் பாதிரியாராக பொறுப்புக்கு வந்துள்ளார்.
இந்த நிலையில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது. மேலும், சர்ச்சுக்கு வரும் பெண்களுக்கு இரட்டை அர்த்தத்தில் வாட்ஸ் அப்-பில் அனுப்பிய மெசேஜ்களின் ஸ்கிரீன் சாட்களும், அவரது ஆபாச வீடியோ காலிங் ஸ்கிரீன் சாட் களும் சமூக வலைத்தளங்களில் பரவியது.
இந்த நிலையில் பெனடிக் ஆன்றோ மீது பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த 18 வயது நர்சிங் கல்லூரி மாணவி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் கடந்த மாதம் 11-ம் தேதி புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் மாணவியை பாலியல் தொந்தரவு செய்ததாக பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதனைத் தொடர்ந்து அவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.பின்னர் அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். இதற்கிடையே அவரை சைபர் கிரைம் போலீசார் ஒரு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் பாதிரியார் பெனடிக் ஆன்றோவை மீண்டும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். மனுவை விசாரணை செய்த நீதிபதி ஒரு நாள் அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். அதனைத் தொடர்ந்து பாதிரியார் பெனடிக் ஆன்றோவை சைபர் கிரைம் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிரியார் பெனடிக் ஆன்றோ மீது மேலும் ஒரு பெண் புகார் செய்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சைபர் கிரைம் போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது

முதல்வர் விஜய்க்கே தெரியாமலை சுற்றறிக்கை விடப்படுகிறதா? திமுக கேள்வி

சென்னை:முதல்வர் விஜய்க்கே தெரியாமல் சுற்றறிக்கைகள் வெளியிடப்படுகிறதா?’ என்று கேள்வி திமுக கேள்வி எழுப்பியுள்ளது.இது

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு: 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சென்னை:சென்னையில் டிரான்ஸ்பார்மர் கொள்முதல் முறைகேடு வழக்கு தொடர்பாகத் தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட

முதல்வர்கள் மாநாட்டில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்த வேண்டும்: நாராயணசாமி

புதுச்சேரி:தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து

தலைநகர் சென்னையில் அச்சத்தில் தான் வாழ வேண்டுமா?: வேல்முருகன் வேதனை கேள்வி

சென்னை:தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்ட அறிக்கையில், “சென்னை வண்ணாரப்பேட்டை தங்கசாலை

அமித்ஷா தலைமையில் தென்மாநில முதல்வர்கள் மாநாடு இன்று தொடக்கம்: முதல்வர் விஜய் பங்கேற்கிறார்

சென்னை:மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஆண்டுதோறும் தென் மாநில முதல்வர்கள் மாநாடு நடத்தப்படுவது

கடலூர் மாநகராட்சி நுழைவாயில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் திடீரென தீக்குளிக்க முயற்சி

கடலூர்:கடலூர் மாநகராட்சியில் கடந்த தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ்