புதுவையில் இடிந்து விழுந்த திருப்பதி தேவஸ்தானம் : 12 ஆண்டாகியும் கோவில் கட்டாததால் பொதுமக்கள் போராட்டம்

புதுவை நேரு வீதியில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கோவில் கட்டப்பட்டிருந்தது. இங்கு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர். இந்த கோவில் 12 ஆண்டுகளுக்கு முன் இடிந்து விழுந்தது. இடிந்து விழுந்த திருப்பதி தேவஸ்தான கோவிலை மீண்டும் கட்டக்கோரி, புதுவை மக்கள் தேவஸ்தானத்திடம் பலமுறை புகார் செய்தனர். இதுவரையில் புதிதாக கோவில் கட்டப்படவில்லை. புதிய கோவில் கட்ட வலியுறுத்தி புதுவை ஆன்மீக சபைகள், பாகவதர்கள், பொதுமக்கள், திருக்கோவில்கள் பாதுகாப்பு கமிட்டி ஆகியவை சார்பில் தேவஸ்தான சேர்மன், நிர்வாக அதிகாரிகள், புதுவை முதலமைச்சர், ஆந்திர கவர்னர் மற்றும் ஆந்திர அரசிடமும் கோரிக்கை மனு வழங்கினர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திருப்பதி தேவஸ்தானம் ஏராளமான புதிய கோவில்களை கட்டி வருகிறது. பழைய கோவில்களை புதுப்பித்து வருகிறது. ஆனால் புதுவையில் உள்ள இடிந்த கோவிலை மட்டும் ஏன் புதிதாக கட்டவில்லை என்று மக்கள் ஆதங்கப்பட்டனர். இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் மற்றும் ஆந்திர அரசை கண்டித்து புதுவை ராஜா தியேட்டர் சந்திப்பில் புதுவை திருக்கோவில் பாதுகாப்பு கமிட்டியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் திருக்கோவில்கள் பாதுகாப்பு கமிட்டியின் பொதுச்செயலாளர் தட்சிணாமூர்த்தி, செயலாளர் பாலாஜி பாகவதர்கள், ஆன்மீக மன்றங்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறையில், புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில், இன்று தொடங்கப்பட்டது.

இந்த மேம்பட்ட தொழில்நுட்பம், ராணுவ மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை சேவைகளை வலுப்படுத்துவதோடு, பணியில் உள்ள வீரர்கள், முன்னாள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல் மையங்கள்

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமையை நிரூபிக்க முடியாதவர்களை அடைத்து வைக்க தடுப்புக் காவல்

திடீர் ஆய்வு

தென்காசியில் கனிம வள கடத்தலை தடுக்க அமைச்சர் பிரபு திடீர் ஆய்வு அனுமதிக்கப்பட்ட