அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார் போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது இனி ஹெல்மெட் போடுவார்: நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

பெண் போலீஸ் தற்கொலை செய்தது பற்றிய பரபரப்பு தகவல்கள்..

சென்னை: சென்னை தலைமைச் செயலக காலனி போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவில் போலீசாக பணியாற்றி வந்தவர் சுகந்தி (வயது 25). இவரது சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் செம்மார் கிராமம் ஆகும். 2017-ம் ஆண்டு இவர், போலீஸ் துறையில் வேலைக்கு சேர்ந்தார். இவர், கோயம்பேடு சேமாத்தம்மன் நகரில் வாடகை வீட்டில் தனது தம்பி சுப்புராயனுடன் தங்கி வேலைக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்த சுகந்தி, சமையல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் சுகந்தி, தனது காதலனுடன் வீடியோ காலில் பேசியபோது ஏற்பட்ட தகராறில், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது.

போலீஸ்காரருடன் காதல் தற்கொலை செய்துகொண்ட சுகந்தி, கோவையில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்தார். அப்போது அங்குள்ள மற்றொரு போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த விஷ்ணு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. விஷ்ணுவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. ஆனாலும் இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் அறிந்த விஷ்ணுவின் மனைவி, போலீஸ் நிலையத்துக்கு நேரில் சென்று சுகந்தியிடம் தகராறு செய்தார். இந்த தகவல் உயர் அதிகாரிகள் வரை சென்றது. இதையடுத்து துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சுகந்தி, சென்னை தலைமை செயலக காலனி போலீஸ் நிலையத்துக்கும், விஷ்ணு அவினாசி போலீஸ் நிலையத்துக்கும் மாற்றப்பட்டனர்.

வீடியோ காலில் தகராறு ஆனாலும் இருவரும் செல்போனில் பேசி வந்ததாக தெரிகிறது. இதற்கிடையில் சுகந்தி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி விஷ்ணுவை வலியுறுத்தினார். ஆனால் அவர், திருமணம் ஆகி முதல் மனைவி இருக்கும் போது உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என மறுத்துவிட்டார். அதன்பிறகு சில நாட்களாக அவர் சுகந்தியிடம் பேசவில்லை என தெரிகிறது. இதனால் மனமுடைந்த சுகந்தி, நேற்று முன்தினம் பணி முடிந்து வீட்டுக்கு வந்ததும் விஷ்ணுவிடம் செல்போனில் வீடியோ காலில் பேசினார். அப்போது தன்னை திருமணம் செய்யும்படி வலியுறுத்தினார். அவர் மறுத்ததால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சுகந்தி, வீடியோ காலில் பேசியபடியே விஷ்ணுவிடம் நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என்று கூறினார். ஆனால் அதை நம்பாமல் விஷ்ணு துண்டித்துவிட்டார். மீண்டும் அவரை தொடர்பு கொண்டபோது போனை எடுக்காததால் விஷ்ணுவின் நண்பரான மற்றொரு போலீஸ்காரை தொடர்பு கொண்டு தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறிவிட்டு சுகந்தி தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக சுகந்தியின் காதலனான போலீஸ்காரர் விஷ்ணு மற்றும் அவருடைய நண்பரான மற்றொரு போலீஸ்காரர் ஆகியோரிடம் விசாரணை நடத்த கோயம்பேடு போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

போலீஸ்காரர் விஷ்ணுவிடம் விசாரணை நடத்திய பின்னரே பெண் போலீஸ் சுகந்தியின் தற்கொலைக்கு உண்மையான காரணம் என்ன? செல்போனில் பேசியபோது அவர்களுக்குள் என்ன பிரச்சினை ஏற்பட்டது? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய

இனி ஹெல்மெட் போடுவார்:

பிளீஸ் ஒரு தடவைமட்டும் அப்பாவை விடுங்கள் : போக்குவரத்து இன்ஸ்பெக்டரிடம் வேண்டுகோள் வைத்த

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில் வழக்குப்பதிவு

நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராடியாக ரஷியாவில் இருக்கும் நபர் மீது பீகாரில்