தக்காளி மொத்த விற்பனையில் கிலோ ரூ.80 – மேலும் ரூ.10 குறைந்தது!

தக்காளி விலை கடந்த ஒரு மாதமாக ஏறுமுகமாகவே இருந்தது. கிலோ ரூ.130 வரை விற்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தக்காளி விலையை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து ரேசன் கடைகளிலும் கிலோ ரூ.60-க்கு விற்கப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்த நிலையில் உச்சத்தில் இருந்த தக்காளியின் விலை கடந்த சில நாட்களாக மெல்ல, மெல்ல குறைந்து வருகிறது. கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் தக்காளி விலை நேற்றை விட கிலோவுக்கு ரூ.10 குறைந்து ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லரை விற்பனை கடைகளில் ரூ.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வழக்கமாக கோயம்பேடு, காய்கறி மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. இன்று காலை கோயம்பேடு சந்தைக்கு 33 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்திருந்தது. ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தற்போது தக்காளி விளைச்சல் பாதிப்பு இல்லாததால் வரும் நாட்களில் மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரிக்கும் என்று தெரிகிறது. அப்போது தக்காளி விலை மேலும் சரிந்து பழைய நிலைக்கு வரும் என்று வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர். கோயம்பேடு மொத்த மார்க்கெட்டில் தக்காளி விலை சற்று குறைந்து இருந்தாலும் வெளிஇடங்களில் உள்ள சில்லறை கடைகளில் தக்காளி விலை குறையவில்லை. கிலோ ரூ.120 வரை விற்கப்படுகிறது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.