போராடும் உரிமை மாணவர்களுக்கு உள்ளது; பார் கவுன்சில் இதில் தலையிட வேண்டாம் – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அதிரடி உத்தரவு

புதுடெல்லி:
ஐதரா​பாத்​தில் உள்ள தேசிய சட்​டப் படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது. இதன் பட்​டமளிப்பு விழாவை முன்னிட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் இந்த விழாவில் பங்கேற்கக் கூடாது என்று மாணவர்​கள் எதிர்ப்பு தெரி​வித்து துணை வேந்​தருக்கு கடிதம் எழு​தினர். இதனால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது.
இந்​நிலை​யில், இது​போன்ற நடவடிக்​கை​களில் மாணவர்​கள் இறங்கி​னால், அவர்​கள் பார் கவுன்​சிலில் பதிவு செய்ய முடி​யாது என்​று இந்​திய பார் கவுன்​சிலின் தலை​வரும், பாஜக எம்​.பி.​யு​மான மன்​னன் குமார் மிஸ்ரா எச்​சரிக்கை விடுத்தார். மேலும் தேசிய சட்​டப் படிப்பு மற்​றும் ஆராய்ச்சி நிறு​வனத்​தின் 2026-ம் ஆண்டு மாணவர்களை மாநில பார் கவுன்​சிலில் வழக்​கறிஞர்​களாக பதிவு செய்ய கூடாது என்று ஒரு சுற்​றறிக்​கை​யும் அனுப்​பி​னார். இது பெரும் சர்ச்​சை​யாக மாறிய நிலை​யில், பார் கவுன்​சில் அனுப்பிய சுற்​றறிக்கை திரும்​பப் பெறப்​பட்​டது.
இந்த விவ​காரம் குறித்து உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்​றும் நீதிப​தி​கள் ஜாய்​மால்யா பக் ஷி, வி.மோகனா ஆகியோர் அடங்​கிய அமர்​வில் மூத்த வழக்​கறிஞர் பரமேஷ்வர் மற்​றும் வழக்​கறிஞர்​கள் முறை​யீடு செய்​தனர்.
அப்​போது தலைமை நீதிபதி சூர்ய காந்த், தெரிவித்த கருத்தில், இது மாணவர்​களுக்​கும் தனக்​கு​மான விவ​காரம். இதில் இந்​திய பார் கவுன்​சின் ஏன் தலையிடுகிறது? மாணவர்​களுக்கு போராடும் உரிமை உள்​ளது, அவர்​களை பார் கவுன்​சிலால் தடுக்க முடி​யாது. நான் மாணவ​னாக இருந்த போதும் மாணவர்​கள் நடவடிக்​கை​களில் ஈடு​பட்​டுள்​ளேன். ஜனநாயக முறை​யில் அமை​தி​யாக போராடும் மாணவர்​களை அனு​ம​திக்க வேண்​டும். பார் கவுன்​சிலோ, வேறு அமைப்​பு​களோ இதில் தலை​யிட தேவை இல்​லை. மாணவர்​கள் நேரடி​யாக எனக்கு கடிதம் எழுதலாம்.
தேசிய சட்​டப் படிப்பு மாணவர்​கள் தங்​கள் படிப்பை முடித்து விரை​வில் வழக்​கறிஞ​ராக பதிவு செய்ய வேண்​டும். அவர்​களை உடனடி​யாக சட்ட உதவி மையத்​தில் பணி அமர்த்த தயா​ராக உள்​ளேன். இவ்​வாறு தெரி​வித்த தலைமை நீதிப​தி, பார் கவுன்​சில் வெளி​யிட்ட சுற்​றறிக்கை குறித்து விளக்​கம்​ அளிக்​க இந்​தி​ய பார்​ கவுன்​சிலுக்​கு நோட்​டீஸ்​ பிறப்​பித்​து உத்​தர​விட்​டார்​.

தென்னலை கதிர் பத்திரிகை மற்றும் ஊடக உரிமை குரல் பத்திரிகை பாதுகாப்பு சங்கம் சார்பில் சுதந்திர தின விழா

சென்னை:தென்னிலை கதிர் பத்திரிகை மற்றும் ஊடக உரிமைக் குரல் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின்

மாநில முதல்வர் தேசிய கொடியேற்றும் உரிமையை பெற்றுத்தந்தவர் கலைஞர்: கனிமொழி எம்பி.

சென்னை:சுதந்திர தினத்தில் மாநிலங்களின் முதல்வர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையைப் போராடி பெற்றுத் தந்தவர்

தமிழகத்தை லஞ்சத்தில் இருந்து காப்பாற்றுவதும் விடுதலை தான்: முதல்-அமைச்சர் விஜய் பேச்சு

சென்னை:80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்-வர் விஜய் சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி