மகாவீர் ஜெயந்தி தினம் : இறைச்சி கடைகள் மூடப்படவேண்டும் : சென்னை மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு,  பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் 4 இறைச்சிக் கூடங்களும், ஜெயின் கோவில்களிலிருந்து  100 மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள அனைத்து இறைச்சிக் கூடங்களும் 21.04.2024 அன்று மூடப்பட வேண்டும் என  பெருநகர சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி, பொதுசுகாதாரத்துறையின் (கால்நடை மருத்துவப்பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் 4 இறைச்சிக் கூடங்களும் வருகின்ற 21.04.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன.

இதேபோல் ஜெயின் கோவில்களிலிருந்து 100 மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள  அனைத்து இறைச்சிக் கடைகளும் மூடப்பட்டு, இறைச்சி விற்பனை செய்யப்படுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.  எனவே, இந்த உத்தரவினை செயல்படுத்த வியாபாரிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

செய்தி வெளியீடு:
இணை இயக்குநர்/மக்கள் தொடர்பு அலுவலர்
பெருநகர சென்னை மாநகராட்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்