“மக்களவைத் தேர்தலுக்கும் பாஜக கூட்டணியுடன் தான் அதிமுக பயணிக்கிறது”: எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னை:
“மக்களவைத் தேர்தலுக்கும் பாஜக கூட்டணியுடன்தான் அதிமுக பயணிக்கிறது” என்று எதிர்க்கட்சித் தலைவர் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இரண்டு நாட்களுக்கு முன்பு நிதியமைச்சர் சட்டமன்றத்தில் அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் 27 சதவீத அறிவிப்புகள்தான் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் நடைபெற்ற பணிகள் குறித்தும், 110 அறிவிப்புகள் குறித்து நிதியமைச்சர் ஏற்கெனவே வெள்ளை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், அதிமுக ஆட்சியில் 1704 அறிவிப்பு வெளியிப்பட்டுள்ளதாகவும், இதில் 1167 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். 492 பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இதன்படி 68 சதவீத பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த உண்மையை மறைத்து, திட்டமிட்டு அதிமுக ஆட்சியில் எந்த பணியும் நடைபெறவில்லை என்று தவறான அவர் செய்தியை கூறியுள்ளார்.
சென்னை மாநகராட்சியில் அட்சய பாத்திரம் திட்டம் மூலம் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இத்திட்டத்தை முதலில் தொடங்கியது அதிமுகதான். தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு அடியோடு சீர் குலைந்துவிட்டது. போதைப்பொருள் தங்கு தடையின்றி கிடைக்கிறது. இதை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றால் மறைத்து பேசுகிறார்கள்” என்றார்.
அதிமுக கூட்டணி தொடர்பான கேள்விக்கு, “பாஜக கூட்டணியில்தான் அதிமுக உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணியில்தான் போட்டியிட்டோம். நாடாளுமன்றத் தேர்தலுக்கும் கூட்டணியோடுதான் பயணம் செய்து வருகிறோம்“ என்று அவர் கூறினார்.

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் மருத்துவ மாணவர்களுக்கான 19-வது ‘கல்பவிருக்ஷா’ பயிலரங்கம்

சென்னை:டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை குழுமம், தனது ஆராய்ச்சி மற்றும் கல்விப் பிரிவான

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் முதன்மை மொழி; பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை:தமிழை சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மையான நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்க வேண்டுமென்றும், உயர்