மத்திய அரசும், நிதி அமைச்சகமும் உத்தரவுகளை நிறைவேற்றுவதில்லை : மதுரை உயர்நீதிமன்றம்

மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ராமநாதபுரம் மோர் பண்ணையைச் சேர்ந்த வழக்கறிஞர் தீரன் திருமுருகன் தாக்கல் செய்த மனுவில்,
”மத்திய அரசின் வன (பாதுகாப்பு) திருத்த மசோதா 2023 முன்மொழியப்பட்டுள்ளது. இதற்கான கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை 15 நாட்களுக்குள் இந்தி அல்லது ஆங்கிலத்தில் தெரிவிக்கக் கூறப்பட்டுள்ளது. இதனால் இந்தி, ஆங்கிலம் தெரியாதவர்கள் கருத்து தெரிவிக்க முடியாத நிலையுள்ளது. எனவே மத்திய அரசின் அறிவிப்பாணைக்குத் தடை விதிக்க வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது.

மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் வன திருத்தப் பாதுகாப்பு மசோதா அறிவிப்பாணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டு இந்தத் தடையை நீக்கக்கோரி மத்திய அரசு சார்பில் நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

நீதிபதிகள், ”தடையைவிலக்கக்கோரி மத்திய அரசு உடனடியாக கோருவதற்கு என்ன அவசரம்?

உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு பல்வேறு வழக்குகளில் பல உத்தரவுகளைப் பிறப்பித்தும் அந்த உத்தரவுகளை மத்திய அரசும், நிதி அமைச்சகமும் நிறைவேற்றுவதில்லை.

மதுரையில் கடன் வசூல் தீர்ப்பாயம் பல ஆண்டுகளாகத் தலைவர் இன்றி செயல்படாமல் உள்ளதால் அதற்குத் தலைவரை நியமிக்க உத்தரவு பிறப்பித்தும் இதுவரை அந்த உத்தரவை நிறைவேற்றவில்லை. மேலும் பல்வேறு உத்தரவுகளை நிறைவேற்றாமல் நீதிமன்றம் தடை விதித்தால் அதற்கு எதிராகக் கோரிக்கை விடுக்கிறீர்கள். இதை எப்படி ஏற்க முடியும். நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றிவிட்டு மேல்முறையீடு செய்ய வேண்டும்” என்றனர். பிறகு தடையை விலக்கக்கோரி மனுத் தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச