மருத்துவ சேவை என்பது வெறும் தொழில் அல்ல, அது ஒரு புனிதமான அர்ப்பணிப்பு

புதுதில்லி அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (எய்ம்ஸ்), நாட்டின் மருத்துவக் கண்டுபிடிப்பு மற்றும் சிறந்து விளங்குவதற்கான முதன்மை இயந்திரமாக உருவெடுத்துள்ளதாகக் குடியரசுத் துணைத் தலைவர் திரு.சி.பி.ராதாகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்தார்.

எய்ம்ஸ் பட்டமளிப்பு விழாவில் இன்று (மே 12)  உரையாற்றிய அவர், எய்ம்ஸ் நிறுவனம் நவீன மருத்துவத்தில் உயர்ந்த தரத்தை நிலைநாட்டும் அதே வேளையில், சாதாரண மக்களுக்கும் மலிவு விலையில் சிகிச்சை அளித்து வருவதைச் சுட்டிக்காட்டினார். பெருந்தொற்று காலத்தின் பின்னடைவை எதிர்கொண்டது முதல் கிராமப்புற மருத்துவச் சேவைகள் வரை, ‘எய்ம்ஸ்’ என்ற பெயர் இந்தியாவிலும் தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்திலும் நம்பிக்கை மற்றும் நேர்மையின் அடையாளமாக மாறியுள்ளது என்றார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் அண்டார்டிகாவில் தொலைதூர ரோபோடிக் ஸ்கேன் பரிசோதனையை எய்ம்ஸ் வெற்றிகரமாக நடத்தியதைக் குறிப்பிட்ட அவர், புவியியல் எல்லைகள் இந்தியாவின் மருத்துவச் சிறப்பிற்கு இனி ஒரு தடையாக இருக்காது என்றார். மேலும், உலகத் தரவரிசையில் எய்ம்ஸ் நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளில் 40 இடங்கள் முன்னேறி 105-வது இடத்தைப் பிடித்துள்ளது. விரைவில் இது உலகின் முதல் 100 இடங்களுக்குள்ளும், ஒரு நாள் உலகின் முதன்மை நிறுவனமாகவும் மாறும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

எய்ம்ஸ் நிறுவனத்தின் தரம் அதன் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விருதுகளிலேயே பிரதிபலிக்கிறது. இதுவரை எய்ம்ஸ் ஆசிரியர்களுக்கு 2 பத்ம விபூஷண், 15 பத்ம பூஷண் மற்றும் 51 பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் உலகின் சிறந்த 2 சதவீத விஞ்ஞானிகள் பட்டியலில் 57 எய்ம்ஸ் ஆசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டம் பெறும் மாணவர்களிடம் பேசிய அவர், செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பங்கள் மருத்துவத்துறையை மாற்றினாலும், ஒரு நோயாளியின் அருகில் இருந்து மருத்துவர் வழங்கும் மனிதநேயமிக்கச் சிகிச்சைக்கு ஈடாக எந்தத் தொழில்நுட்பமும் இருக்க முடியாது என்றார். மருத்துவர்கள் அணியும் வெள்ளை அங்கி என்பது தனிப்பட்ட வெற்றியையும் தாண்டி, சமூகத்தின் எதிர்பார்ப்பைச் சுமந்து நிற்பதாகும். எனவே, சமூகத்திற்குப் பணிவு, நேர்மை மற்றும் இரக்கத்துடன் சேவை செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்த விழாவில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெகத் பிரகாஷ் நட்டா, எய்ம்ஸ் இயக்குநர் பேராசிரியர் நிகில் டாண்டன், கல்வித் தலைவர் பேராசிரியர் ராதிகா டாண்டன் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 60 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள்

மத்திய ரிசர்வ் வங்கி காந்தி படத்துக்கு பதிலாக புதிய வடிவமைப்பு அல்லது பிளாஸ்டிக் பணம் தொடர்பாக யோசிக்கிறதாம்

மத்திய ரிசர்வ் வங்கி காந்தி படத்துக்கு பதிலாக புதிய வடிவமைப்பு அல்லது பிளாஸ்டிக்

இஎஸ்ஐசி மருத்துவமனைகளிலும், மருந்தகங்களிலும் மையப்படுத்தப்பட்ட இணையவழி நோயாளி கருத்துப்பதிவு அமைப்பு தொடக்கம்

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக்

20வயதுக்குட்பட்டவர்களுக்கான 22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 19 பதக்கங்களை வென்று சாதனை படைத்த இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்து

20 வயதுக்குட்பட்டவர்களுக்கான 22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்திய இந்திய அணிக்கு