அண்மை செய்தி
ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம். அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தகவல் எக்ஸ்பிரஸ் குழு தெரிவித்துக் கொள்கிறது திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் பிரான்சில் நடைபெற உள்ள ‘பாரத் இன்னோவேட்ஸ் 2026’ நிகழ்வில் அதிநவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை சென்னை ஐஐடி காட்சிப்படுத்துகிறது டிஜிட்டல் கைது மோசடிகளில் இருந்து மனித உரிமைகளைப் பாதுகாத்தல்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆலோசனை கணவர் பாஸ்கரனை ஏமாற்றிவிட்டு நகை மற்றும் பணத்துடன் தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரதிராஜா உடலுக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி

மிக்ஜாம் புயல் நிவாரண நிதிக்கு ஒருமாத ஊதியத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை:
மிக்ஜாம் புயல் நிவாரணத்துக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒருமாத சம்பளத்தை வழங்கினார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், மிக்ஜாம் புயல் பேரிடர் பாதிப்பிலிருந்து மீள முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு என்னுடைய ஒரு மாத ஊதியத்தை வழங்குகின்றேன். அனைத்து சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிதி அளித்திடுமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன். மிக்ஜாம் புயலால் கடந்த டிசம்பர் 2 முதல் 4ம் தேதி வரை சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த மழை என்பது, 47 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவிலான பெருமழை. இந்த இயற்கைப் பேரிடரால் ஏறத்தாழ 1 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்தப் பேரிடர் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களுக்கு ஏற்பட்டுள்ள பேரிடர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்குமே ஏற்பட்டுள்ள பேரிடர். மழைநீர் வடிகால் பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்தி இருந்ததால்தான் பேரழிவு தவிர்க்கப்பட்டது. அதேபோல் அனைத்துத் துறைகளும் பேரிடரை எதிர்கொள்ள தயார் நிலையில் இருந்ததும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வைத்திருந்ததும் இணைந்து மக்களைக் காத்துள்ளது. இருப்பினும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழுவீச்சில் நடைபெற்ற மீட்புப் பணிகளின் காரணமாக மூன்று நாட்களுக்குள் பெரும்பாலான இடங்கள் மீட்கப்பட்டு இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி உள்ளது.
குறிப்பிட்ட சில பகுதிகளில் மீட்புப் பணி நடந்து வருகிறது. இத்தகைய அசாதாரண நேரத்தில் அனைத்துத் தரப்பும் மக்களுக்கு உறுதுணையாக நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்தப் பேரிடர் பாதிப்பிலிருந்து மக்கள் மீள்வதற்கு உதவியாக நல்லுள்ளங்கள் பலர் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்களுடைய பங்களிப்பை வழங்குகின்றனர். அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்த இயற்கைப் பேரிடரிலிருந்து மீள்வதற்கான கூடுதல் நிதி ஆதாரங்களைத் திரட்ட வேண்டியது அவசியமாகிறது. எனவே, அரசின் முனைப்பான முயற்சிகளுக்கு நமது சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தங்களால் இயன்ற வகையில் உதவி செய்ய வேண்டியது அவசியம்.
இச்சூழலில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிட வேண்டுமென்று உங்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கின்றேன். அதன் தொடக்கமாக என்னுடைய ஒரு மாத கால ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குகிறேன். தமிழ்நாட்டில் உள்ள அனைத்துச் சட்டமன்ற உறுப்பினர்களும் – நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களும் தங்களுடைய ஒரு மாத கால ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கிடுமாறு கேட்டு கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறோம். அவரது குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தகவல் எக்ஸ்பிரஸ் குழு தெரிவித்துக் கொள்கிறது

மயிலு சப்பானி பரட்டை கூத்து குறுவம்மா இதுவெல்லாம் இயக்குனர் இமயம் பாரதிராஜா படைத்த

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

2குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 62

பிரான்சில் நடைபெற உள்ள ‘பாரத் இன்னோவேட்ஸ் 2026’ நிகழ்வில் அதிநவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளை சென்னை ஐஐடி காட்சிப்படுத்துகிறது

மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தால் பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் இம்மாதம் 14-ம் தேதி

டிஜிட்டல் கைது மோசடிகளில் இருந்து மனித உரிமைகளைப் பாதுகாத்தல்: தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆலோசனை

புதுதில்லியில் உள்ள மனித உரிமை பவனில், ‘டிஜிட்டல் கைது மோசடிகளில் இருந்து மனித

கணவர் பாஸ்கரனை ஏமாற்றிவிட்டு நகை மற்றும் பணத்துடன் தலைமறைவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் கோயில் வளாகத்தில் பழ வியாபாரம் செய்து வரும் பாஸ்கர்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61: