மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையை உயர்த்தியது தமிழக அரசு..!!

சென்னை: மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடல் மீன்வளத்தைப் பேணிக்காத்திட 2001ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடைக்காலம் நடைமுறையில் உள்ளது. மீன்பிடித் தடைக்காலத்தில் மீனவர்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு 14 கடலோர மாவட்டங்களிலும் உள்ள கடலோர மீனவ குடும்பங்களுக்கு குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வீதம் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக தமிழக அரசு வழங்கி வருகிறது.

அத்தொகையினை உயர்த்தி வழங்க கோரி பல்வேறு மீனவர் சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளிடமிருந்து தொடர்ந்து கோரிக்கைகள் பெறப்பட்டு வந்த நிலையில், மீனவ குடும்பங்களின் கோரிக்கையினை ஏற்று, அவர்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு கடந்த ஏப்ரல் 18ம் தேதி இராமநாதபுரத்தில் நடைபெற்ற மீனவர் நல மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2024-25ம் ஆண்டு முதல் மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையினை ரூ.5000ல் இருந்து ரூ.8000 ஆக உயர்த்தி வழங்கிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அவ்வறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 1,79,000 கடலோர மீனவ குடும்பங்கள் பயன்பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் ஆகஸ்ட் 1-ல் தொடக்கம்

மக்கள்தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்பின் களப்பணிகள் நாளை (2026 ஆகஸ்ட் 1)

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச