யூபிஐ பணப்பரிவர்த்தனையா?: ரூ.2000த்துக்கு மேல் சென்றால் கூடுதல் கட்டணம்

சென்னை:
யூபிஐ வாயிலாக 2000 ரூபாய்க்கு அதிகமான தொகைக்கு ஆன்லைன் மூலம் வணிக பரிமாற்றம் செய்தால் வரும் 1ம் தேதி முதல் 1.1% வரை கூடுதல் கட்டணம் வசூலிக்க தேசிய பணப்பட்டுவாடா நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது.
இந்தியா முழுவதும் தற்போது ஆன்லைன் பண பரிவத்தனைகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகின்றது. அந்த வகையில் தற்போது பொதுமக்கள் அனைவரும் தங்கள் வங்கி கணக்குகளை யூபிஐ -ல் இணைத்து கொண்டனர் . அதன் மூலம் கூகுள் பே, போன் பே, பேடி எம் போன்ற பண பரிவர்த்தனை செயலிகள் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை செயலிகள் மூலம் பொதுமக்கள் தங்களின் பணத்தை மாற்றி கொள்கின்றனர். இது நாடு முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், தற்போது நேஷனல் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா என்கிற தேசிய பணப்பட்டுவாடா நிறுவனம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ரூ.2000க்கு மேலான யூபிஐ பணப் பரிவர்த்தனைகளுக்கு 1.1% கூடுதல் கட்டணம் வசூலிக்க பரிந்துரை செய்துள்ளது. சிறிய கடைகளில் 2000 ரூபாய்க்கு மேல் பரிமாற்றம் செய்தால் 1.1% , அரசு நிறுவனங்கள் தொடர்பான பண பரிமாற்றங்களுக்கு 1%, மியூச்சல் ஃபண்ட், காப்பீடு, ரயில்வே ஆகியவற்றிற்கு மேற்கொள்ளப்படும் பரிமாற்றங்களுக்கு 1% என்ற அளவில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல்பொருள் அங்காடிக்கு 0.9%, தொலைத்தொடர்பு, அஞ்சல், கல்வி, விவசாயம் 0.7%,எரிபொருளுக்கு 0.5%,என கூடுதல் கட்டணம் வசூலிக்க தேசிய பணப்பட்டுவாடா நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. இந்த கூடுதல் கட்டணம் ரூ.2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே என்பதுடன், இது ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல் மற்றும் அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அண்மைத் தகவல்கள்

மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவும் சூழலில் முக்கியத் துறைகள் முழுவதும் தயார்நிலையையும், தடையற்ற செயல்பாட்டையும் உறுதி செய்வதற்காக மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. மேற்கு ஆசியாவில் உருவாகியுள்ள சூழ்நிலையின் பின்னணியில், எரிசக்தி விநியோகம், கடல்சார் நடவடிக்கைகள், அப்பகுதியில் உள்ள இந்திய

வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த கியூஆர் குறியீடு அடிப்படையிலான அடையாள அட்டை முறையை தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது

வாக்கு எண்ணும் மையங்களில் அங்கீகாரமில்லாத நபர்கள் யாரேனும் வருவதற்கான சாத்தியக்கூறினை நீக்குவதற்காக இசிஐநெட்