ராஜபக்சே சகோதரர்களின் வீழ்ச்சியை நினைவுகூரும் நிகழ்ச்சிகளுக்கு இலங்கையில் தடை : கொழும்பு

இலங்கையில் ஏற்பட்ட வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியால் கொந்தளிப்புக்குள்ளான அந்த நாட்டு மக்கள் இந்த நெருக்கடிக்கு அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினரே காரணம் என கூறி கடந்த ஆண்டின் தொடக்கத்தில் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டம் பல மாதங்களாக அமைதியாக நடந்து வந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் 9-ந் தேதி அப்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் ஆதரவாளர்கள் போராட்டக்காரர்களை தாக்கினர். இதனால் அங்கு பெரும் வன்முறை வெடித்தது. இதில் 10 பேர் பலியாகினர். 200-க்கும் அதிகமானோர் பாடுகாயம் அடைந்தனர். இந்த வன்முறையை தொடர்ந்து, மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

அதன் பிறகும் போராட்டங்கள் தொடர்ந்த நிலையில் ஜூலை மாதம் நாட்டைவிட்டு தப்பியோடிய அதிபர் கோத்தபய ராஜபக்சே பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் ராஜபக்சே சகோதரர்களின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்த மே-9 வன்முறையை நினைவுகூரும் நிகழ்ச்சிகளை நடத்த போராட்டக்குழுக்கள் முடிவு செய்திருந்தன. ஆனால் இந்த நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்க வேண்டுமென போலீசார் கொழும்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட்டு மே-9 வன்முறையை நினைவுகூரும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்தனர்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 61 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 61:

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை அருகே தேவர் நகரில், மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நாகசுமன்–கிருஷ்ணவேணி தம்பதியை கைது செய்ய ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுஜன் சென்றார்.

அப்போது தம்பதியர் வீட்டில் இருந்து வெளியே வர மறுத்ததுடன், நாயை ஏவி உதவி