ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது: ராமதாஸ் கோரிக்கை…

சென்னை:
ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்கும் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது என பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஹைட்ரோ கார்பன் வளங்களை எடுக்கும் நோக்குடன் அங்கு 20 இடங்களில் சோதனைக் கிணறுகளை அமைக்க தமிழக அரசிடம் மத்திய அரசின் ஓஎன்ஜிசி எனப்படும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி கோரியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் விளை நிலங்களை பாழாக்கி, பாலைவனமாக்கும் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் இந்தத் திட்டம் மிகவும் ஆபத்தானது. இந்த திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது. ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி, கீழக்கரை, கடலாடி ஆகிய வட்டங்களிலும், சிவகங்கை மாவட்டத்தின் தேவகோட்டை வட்டத்திலும் இந்த சோதனை கிணறுகள் அமைக்கப்படவுள்ளன.

தமிழக அரசின் அனுமதி இல்லாமல் இத்தகைய கிணறுகளை அமைக்க முடியாது என்பதால், 20 இடங்களில் சோதனைக் கிணறுகளை அமைக்க அனுமதி கோரி தமிழக அரசின் மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் ஓ.என்.ஜி.சி விண்ணப்பித்துள்ளது. ஓஎன்ஜிசி நிறுவனத்தின் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அனைத்தும் ஏறக் குறைய 3000 அடி ஆழத்துக்கு அமைக்கப்படவுள்ளன.

ஒவ்வொரு கிணறும் ரூ.33.75 கோடி செலவில் அமைக்கப்படவுள்ளது. நீரியல் விரிசல் என்ற இயற்கைக்கு எதிரான தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, வேதிப் பொருட்களின் கலவையை பூமிக்குள் செலுத்தி, பாறைகளை விலக்கி, அவற்றுக்கு நடுவில் உள்ள மீத்தேன் எரிவாயு எவ்வாறு எடுக்கப்படுமோ, அதேபோல் தான் ஹைட்ரோகார்பன் வளமும் நீரியல் விரிசல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி எடுக்கப்படும்.

இந்த தொழில் நுட்பம் பயன்படுத்தப்படும் போது நிலநடுக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும் ஆபத்துகள் உள்ளன. இந்தத் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ஹைட்ரோ கார்பன் வளங்கள் எடுக்கப்பட்டால், ராமநாதபுரம் மாவட்டமே வறண்ட நிலமாக மாறும் என தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க ஓஎன்ஜிசி நிறுவனம் முயல்வது முறையல்ல.

மத்திய அரசு செயல்படுத்தி வரும் புதிய எண்ணெய் எடுப்பு கொள்கையின் அடிப்படையில் கடந்த 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட மூன்றாவது சுற்று திறந்த வெளி ஏலத்தின் போது ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,403 சதுர கிலோ மீட்டர் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் கடலூர், நாகப்பட்டினம், புதுச்சேரியின் காரைக்கால், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் 44 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க மத்திய அரசிடம் ஓ.என்.ஜி.சி விண்ணப்பித்திருந்தது. அப்போதே இந்தத் திட்டத்துக்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளிக்கக் கூடாது என்று நான் வலியுறுத்தியுள்ளேன்.

இதன் பின்னரும், மத்திய அரசிடமிருந்து உரிய அனுமதிகளை பெற்று விட்ட ஓ.என்.ஜி.சி நிறுவனம், அடுத்தக் கட்டமாக இப்போது தமிழக அரசின் சுற்றுச்சூழல் அனுமது கோரி விண்ணப்பித்திருக்கிறது. ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் ஹைட்ரோ கார்பன் கிணறு திட்டத்துக்கு தமிழக அரசு சுற்றுச்சூழல் அனுமதி அளிப்பது தமிழகத்தின் நலன்களை பாதிக்கும் செயலாககும்.

தமிழகத்தில் மரக்காணம் முதல் ராமநாதபுரம் வரையிலான பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை செயல்படுத்த இதுவரை 5 உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றின்படி மொத்தம் 7250 சதுர கி.மீ பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. இப்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 கிணறுகளை அமைக்க அனுமதி அளிக்கப்பட்டால், அடுத்தடுத்து பிற திட்டங்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதன் பின் தமிழகத்தின் பெரும் பகுதி வறண்ட நிலமாக மாறிவிடும்.

முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில், மத்திய அரசால் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் அறிவிக்கப்பட்ட போது, பாமக கொடுத்த தொடர் அழுத்தத்தால், தமிழகத்தில் எந்த ஹைட்ரோ கார்பன் திட்டமும் அனுமதிக்கப்படாது என்று சட்டப்பேரவையில் அரசு வாக்குறுதி அளித்தது. அதைத் தொடர்ந்து தான் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என அறிவிக்கப்பட்டது. ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி அளிக்கும் விஷயத்தில் இப்போதைய திமுக அரசும் அதே நிலைப்பாட்டைத் தொடர வேண்டும்.

ராமநாதபுரம் மாவட்டம் காவிரி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்துக்கு வெளியில் இருந்தாலும் கூட, அங்கும் வேளாண்மையும், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்பட வேண்டியது கட்டாயம் ஆகும். அதனால், தமிழகத்தின் நலனுக்கு எதிரான, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறு அமைக்கும் திட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது. இது தொடர்பாக மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத் திடம் ஓ.என்.ஜி.சி தாக்கல் செய்துள்ள விண்ணப்பம் தள்ளுபடி செய்ய என டாக்டர்.ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 65 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 65

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சீனாவின் ஜியாங்சு மாகாணம், சாங்ஜோ நகரின் வுஜின் மாவட்டத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து…

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட் நிறுவனத்தின் தேசிய அளவிலான சந்தை விரிவாக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

சென்னையில் இரண்டாவது ‘UV ஸ்பேஸ் ஸ்டேஷன்’ (UV Space Station) தொடங்கப்பட்டிருப்பது, அல்ட்ராவைலட்

திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும்

குறள் 64 :குறளின் அதிகாரமும் விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது: அதிகாரம்: வாழ்க்கைத் துணைநலம்இயல்: இல்லறவியல்பால்: அறத்துப்பால் குறள் 64

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம் அடைந்து இறந்துபோன சம்பவம்

சென்னை தி நகரில் பள்ளி மைதானத்தில் கால்பந்து விளையாட்டில் பள்ளி மாணவன் மயக்கம்

உண்மைத்தன்மை, நடுநிலைமை, பொது நலனைக் கடைப்பிடிக்குமாறு வளரும் பத்திரிகையாளர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் அறிவுரை

இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் (IIMC) முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்காக ‘சன்சத் தொலைக்காட்சி’ நடத்திய ஒரு மாத