அண்மை செய்தி
முன்னாள் அமைச்சர் மாசு முன்னிலையில் த.வெ.க. நிர்வாகிகள் 50 பேர் திமுகவில் இணைந்தனர் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) 2026 விண்ணப்பப் படிவம் வெளியிடப்பட்டுள்ளது திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் “ராஜினாமாவால் மூடி மறைக்க முடியாது” மாணவர்களுக்கு எதிரான தற்போதைய வன்முறை: சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அலுவலகத்தை, அதே வளாகத்தில் அமைந்துள்ள 10 அடுக்குகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்றுவதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தொன்மை வாய்ந்த கோட்டை பிரதான கட்டிடத்தில் நிலவும் இடநெருக்கடி, வாகன நிறுத்துமிட வசதிக்குறைவு மற்றும் மரபுவழிக் கட்டிடக் கட்டுப்பாடுகள் காரணமாக நிர்வாகச் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த இடமாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க மறுப்பு: மார்ச் 17 ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு

சென்னை:
அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்துசெய்யக்கோரிய ஓபிஎஸ் தரப்பினர் வழக்கில் ஈபிஎஸ் பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் ஓபிஎஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அதிமுக எம்.எல்.ஏ.மனோஜ் பாண்டியர் தொடர்ந்த வழக்கின் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே பொதுக்குழு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து இருந்த நிலையில், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் குறித்து எதுவும் சுப்ரீம் கோர்ட்டு கூறவில்லை.
இதனை அடிப்படையாக கொண்டு பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்துசெய்யவேண்டும் என ஓபிஎஸ் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்போது ஓபிஎஸ் தரப்பு வாதம் நடைபெற்று வருகிறது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் ஈபிஎஸ் தரப்பு செயல்பட தடை விதிக்க வேண்டும் என்றும், கட்சியில் இருந்து நீக்கியது சட்டவிரோதமானது என்றும், எந்த நோட்டீசும் இல்லாமல் நீக்கியுள்ளனர் என்றும் ஓபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கட்சியை விட்டு நீக்க பொதுக்குழுவிற்கு அதிகாரம் இல்லை என்றும், கட்சி விதிப்படி ஒருங்கினைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே நடவடிகை எடுக்கமுடியும் என்றும் ஓபிஎஸ் தரப்பு வாதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கில் ஈபிஎஸ் அதிமுக ஆகியோர் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளது. தீர்மானங்களுக்கு எதிரான வழக்கில் ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் வைத்தியநாதன் காணொலி வாயிலாக பங்கேற்றுள்ளார். இந்த வழக்கில், ஈபிஎஸ் தரப்பை கேட்காமல் உத்தரவை பிறப்பிக்கவேண்டும் என்ற ஓபிஎஸ் தரப்பின் கோரிக்கையை கோர்ட்டு நிராகரித்தது.
அதிமுக, ஈபிஎஸ் உள்ளிட்ட எதிர்மனுதாரர்களிடம் விளக்கம் கோராமல் தீர்மானத்திற்கு தடைவிதிக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், இந்த வழக்கில் ஈபிஎஸ் தரப்பு பதிலளிக்க வரும் 17 ஆம் தேதி வரை அவகாசம் கொடுத்து வழக்கை 17ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் அலுவலகத்தை, அதே வளாகத்தில் அமைந்துள்ள 10 அடுக்குகள் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடிக்கு மாற்றுவதற்கான ஆயத்தப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தொன்மை வாய்ந்த கோட்டை பிரதான கட்டிடத்தில் நிலவும் இடநெருக்கடி, வாகன நிறுத்துமிட வசதிக்குறைவு மற்றும் மரபுவழிக் கட்டிடக் கட்டுப்பாடுகள் காரணமாக நிர்வாகச் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த இடமாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு முதலமைச்சர்

சென்னை அடையாறில் உள்ள தனது வணிக வளாகக் கட்டிடத்தில் இயங்கி வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) என்ஆர்ஐ கிளையின் மேலாளரைத் தாக்கிய குற்றச்சாட்டின்கீழ், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகளான கயல்விழி மீது அடையாறு காவல்துறையினர் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்

சென்னை அடையாறில் உள்ள தனது வணிக வளாகக் கட்டிடத்தில் இயங்கி வரும் ஸ்டேட்