சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.43.20 கோடியில் 62.73 கி.மீ. நீளத்திற்கு சாலை அமைக்கும் பணி

சென்னை:
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதியில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 6 மண்டலங்களில் ரூ.43.20 கோடி மதிப்பீட்டில் 62.73 கி.மீ நீளத்தில் 362 சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு முதலமைச்சரால் சென்னை மாநகரை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் வழிகாட்டுதலின்படியும், மேயர் ஆலோசனையின்படியும் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புர சாலை உட்கட்டமைப்பு நிதி மற்றும் சேமிப்பு நிதியின் கீழ் ரூ.65.07 கோடி மதிப்பீட்டில் 122.45 கி.மீ. நீளத்தில் 670 தார்ச்சாலைகள் அமைக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், 6 மண்டலங்களில் ரூ.43.20 கோடி மதிப்பீட்டில் 62.73 கி.மீ. நீளத்திற்கு புதிதாக சாலைகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளன.
சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் திருவொற்றியூர், மணலி, ராயபுரம், வளசரவாக்கம், அடையாறு மற்றும் பெருங்குடி மண்டலங்களில் ரூ.25.20 கோடி மதிப்பீட்டில் 45.5 கி.மீ. நீளத்தில் 334 சாலைப் பணிகளுக்கும், ரூ.18 கோடி மதிப்பீட்டில் 17.23 கி.மீ. நீளத்தில் 28 பேருந்து சாலைகள் அமைக்கும் பணிகளுக்கு பணி ஆணை கடந்த 18.02.2023 அன்று வழங்கப்பட்டு, தற்பொழுது சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்தச் சாலைகள் மற்றும் பேருந்து சாலைகள் அமைக்கப்படும்போது, ஏற்கனவே உள்ள சாலைகளின் மேற்பரப்பு முழுவதுமாக அகழ்ந்தெடுக்கப்பட்ட பிறகு தான் புதிய சாலைகளை அமைக்க வேண்டும் எனவும், சாலைகள் உரிய அளவீடுகள் மற்றும் தரத்துடன் அமைக்கப்பட வேண்டும் எனவும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் சாலைகளில் இரவு நேரங்களில் சாலைகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், போக்குவரத்து மாற்றம் தேவைப்படும் இடங்களில் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட வேண்டும் எனவும், பணிகள் முடிந்தவுடன் சாலையின் தடிமன், அளவீடு சரியான அளவில் இருப்பது அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட வேண்டும் எனவும், சாலை அமைத்தல் தொடர்பான அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார்.

“சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரான கார்த்தி சிறுமியை அழைத்து சென்றுள்ளார். குற்றத்தை மறைக்க முயன்றதால்

காரைக்குடி தொகுதியின் செல்லப்பிள்ளை மாண்புமிகு.Dr .TK பிரபு MLA

முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்பிறப்பொக்கும் எல்ல உயிர்ஜோசப் விஜய் அவர்களுக்கும் தமிழ்நாட்டின் அமைச்சராகபதவியேற்கும்காரைக்குடி தொகுதியின்

தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை

🔹🔸தமிழ்நாட்டில் புதிய ராக்கெட் உற்பத்தி மற்றும் சோதனை மையத்தை அமைக்கிறது விண்வெளித் துறை!விண்வெளித்

தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து தென்மண்டல ஐஜி விஜயேந்திர பிதாரி உத்தரவு

🔹🔸 தென் மண்டலத்தில் அதிரடி மாற்றம் : தென் மண்டலத்தில் 94 காவல்