சென்னை:
ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவைக் கண்ட நிலையில் கடந்த சில நாட்களாக ஏறுமுகத்துடனேயே இருந்து வருகிறது. இவற்றை எல்லாம் கடந்து இன்று ஒரே நாளில் உச்சத்தைத் தொட்டுள்ளது.
நேற்று சவரனுக்கு ரூ.200 வரை குறைந்து விற்பனையானது. இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.65 அதிகரித்து 5,600 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.520 அதிகரித்து ரூ.44,800 ஆகவும் விற்பனையாகிறது.
18 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.53 அதிகரித்து 4,587 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.424 வரை அதிகரித்து ரூ.36,696 ஆகவும் விற்பனையாகிறது.
ஒரு கிராம் வெள்ளி விலையில் நேற்றைய விலை மாற்றம் இல்லாமல் ரூ.77.10 எனவும், கிலோ ஒன்றிற்கு ரூ.77,100 எனவும் விற்பனையாகிறது.