அமைச்சராக இருப்பவர் சிறை கைதியாக இருந்து வருவது மோசமான முன்னுதாரணம்: எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி……

அமைச்சர் பதவியில் இருப்பவர் சிறைக் கைதியாக இருந்து வருவது ஒரு மோசமான முன்னுதாரணமாகிவிடும் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில், மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா உட்பட சில நிகழ்ச்சிகளில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான பழனிசாமி பங்கேற்றார். இதில், சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், எம்எல்ஏக்கள் உள்பட அதிமுகவினர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியதாவது: அதிமுக எப்போதும் வலுவான கட்சி, முதல்வர் ஸ்டாலின் தான் மிசா, எமர்ஜென்சியை பார்த்தவன் என்று கூறுகிறார். அந்த மிசா, எமர்ஜென்சியைக் கொண்டு வந்தது காங்கிரஸ் ஆட்சியில் தான்.

அப்போது, காங்கிரஸ் கட்சியால் பாதிக்கப்பட்ட திமுகதான், தேர்தல் வரும்போதுதான் கூட்டணி பற்றி தெரியும். அதுவரை அவரவர் கட்சி நலனுக்காக மட்டுமே பேச முடியும்.

உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நடக்கும் வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக திமுக கூட்டணிக் கட்சிகள் பேசுகின்றன. கரூரில், வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் ஏதும் தெரிவிக்கவில்லை.

சிறைக் கைதி எண் வழங்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, இன்னமும் அமைச்சராக தொடர்வது எவ்வாறு சாத்தியம் என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுக ஆட்சியின்போது குற்றச்சாட்டுக்கு ஆளாகிய ஆலடி அருணா, என்.கே.கே.பி.ராஜாவை கருணாநிதி நீக்கினார். அதிமுக ஆட்சியின் போது, அக்ரி கிருஷ்ணமூர்த்தியை ஜெயலலிதா நீக்கினார். தமிழகத்துக்கென்று ஒரு அரசியல் நாகரிகம் உள்ளது.

அதை முதல்வர் மு.க. ஸ்டாலின் பின்பற்ற வேண்டும். சிறைக் கைதியாக இருப்பவர் பதவியில் தொடர்வது மோசமான முன்னுதாரணமாகிவிடும். அரசியல் நாகரிகம் கருதி செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து முதலமைச்சர் நீக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அதன் அடிப்படையில் நடிகர் விஜய் தன்னுடைய கருத்துகளை சொல்லி இருக்கிறார்.

‘நீட்’ வரக்கூடாது என்பதில் அதிமுக முதன்மையாக இருக்கிறது. திமுகவைச் சேர்ந்த காந்திச் செல்வன், மத்திய இணை அமைச்சராக இருந்தபோதுதான் ‘நீட்’ தேர்வு வந்தது. ஆனால் அதை மறைக்கப் பார்க்கின்றனர். இந்தியா முழுவதும் ‘நீட்’ தேர்வு வர காரணமாக இருந்தவர்கள் திமுக-காங்கிரஸ் கட்சியினர் தான். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

குமரி மாவட்டத்தில் 2 நாட்களில் AI கேமரா மூலம் 700 பேருக்கு அபராதம்

நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் வகையில் எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசின் வழக்கறிஞர்கள் உரிய வாதங்களை முன்வைக்காமல் மெத்தனமாகச் செயல்பட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்

தமிழ்நாட்டின் உயர் சிறப்பு மருத்துவ (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) இடங்கள் தொடர்பான வழக்கில், உச்ச

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார் 101 அடி (31 மீட்டர்) உயரத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் விஜய் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இருந்து நந்தனம் வரை மெட்ரோ ரயிலில் பயணித்து ஆய்வு நடத்திய அவர், அங்கிருந்து கார் மூலம் கிண்டி கத்திப்பாரா சந்திப்பிற்கு வருகை தந்தார்

சென்னை கிண்டி கத்திப்பாராவில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 5-வது வழித்தடத்தில், சுமார்

போதைப் பொருளுக்கு எதிரான இளைஞர்கள் உறுதிமொழி இயக்கம் ஆகஸ்ட் 2 அன்று தொடங்குகிறது

போதைப்பொருள் இல்லா வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதற்கான ஒரு பெரிய