அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரூர் பங்குமக்கள் கோரிக்கையை நிராகரிக்கும் தர்மபுரி மறை மாவட்ட கத்தோலிக்க ஆயர் இல்லம்: போராட்டம் நடத்த கிறிஸ்தவ மக்கள் முன்னணி முடிவு

சென்னை:
கிறிஸ்தவ மக்கள் முன்னணி நிறுவன தலைவர் மரிய ஆரோக்கியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிறிஸ்தவ ஆலய ஆயர்களை பற்றியோ, குருக்களை பற்றியோ, அருட்சகோதரிகளை பற்றியோ, எந்த சூழ்நிலையிலும் தரக்குறைவாக எழுத கூடாது, பேசக்கூடாது என்ற நல்லெண்ணத்தோடு “கிறிஸ்துவ மக்கள் முன்னணி”யினை வழிநடத்தி வருகின்றேன்.
இந்த அமைப்பு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளது. புதுச்சேரி மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களிலும் கிறிஸ்துவ மக்கள் முன்னணி பரந்து விரிந்துள்ளது. இது சபை வேறுபாடுயின்றி, சாதிய வேறுபாடு இன்றி அனைத்து கிறிஸ்தவர்களும் சங்கமித்துள்ள பேரமைப்பாகும்.
இத்தகைய சிறப்புமிக்க இயக்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் என்ற முறையில், தர்மபுரி மறைமாவட்டம் அரூர் பங்கில் பல ஆண்டுகளாக மக்களுக்கும்,சேசுசபை குருக்களுக்கும் இடையே நடைபெற்று வரும் போராட்டத்தினால் பங்கும், பங்கின் பணிகளும், மக்களும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.
இந்த நிலையில் அரூர் பங்கு மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு குரல் கொடுக்கும் வகையில் தர்மபுரி மாவட்ட கிறிஸ்துவ மக்கள் முன்னணி தோழர்களுடன் இணைந்து மாநில துணைத் தலைவர், திருச்சி ஏ.ஜெ.சாலமோன், மாநில செயலாளர் கடலூர் ராயப்பன், துணை செயலாளர் மரியசூசை (புதுக்கோட்டை)பொருளாளர் திண்டுக்கல் ஆரோக்கியதாஸ், தலைமை ஒருங்கிணைப்பாளர் விழுப்புரம் எலியாஸ் ஆகிய நிர்வாகிகளும் கலந்து கொண்டு அரூரில் 25.04.2023 அன்று மாபெறும் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டு இருந்தோம்.
அதற்கு முன்பாக தர்மபுரி மறைமாவட்ட ஆயர் இல்லத்தினை தொடர்பு கொண்டு சுமுகமான முடிவு ஏற்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டு தொடர்பு கொண்டேன். ஆயர் இல்லத்தில் இருந்து அர்த்தமற்ற பொறுப்பில்லாத பதில் வந்தது. இதனை கண்டு திடுக்கிட்டு போனேன். நமக்கே பதில் இப்படி என்றால், அரூர் பங்கு மக்கள் எத்தனை வேதனைகளையும், அவமானங்களையும், சந்தித்து இருப்பார்கள் என்பதை உணர்ந்தேன்.
எனவே, தற்போது இந்த போராட்டத்தை கைவிட்டுவிட்டு ஆயர் இல்லத்திற்குள் நுழையும் போராட்டம் என அறிவிக்க உள்ளேன். அன்று ஆயர் இல்லம் அதிரவேண்டும். அதிகார போதை இறங்க வேண்டும். புனிதமான வெள்ளை அங்கியினை கைப்பற்றிவைத்து விட்டு ஓடிவிடலாமா என்று எண்ணும் வகையில் போராட்டத்தை நடத்த வேண்டும். மாநிலத்தின் பிற இடங்களில் உள்ள ஆயர் இல்லங்களில் கிறிஸ்துவ மக்கள் முன்னணி மற்றும் நமது தோழமை அமைப்புகளின் ஆதரவுடன் முற்றுகை போராட்டம் நடைபெறும் வகையில் போராட்ட யுக்திகளை வகுத்தும்,தோழமை அமைப்புகளின் ஆதரவையும் திரட்டி வருகின்றேன்.
தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் அரூர் பங்கு மக்களின் பிரச்சனையினை கொண்டு சென்று மக்களின் ஆதரவுடன் மாபெரும் போராட்டம் விரைவில் நடைபெறும் என்பதை பொறுப்பற்ற சுயநலவாத கும்பலான தர்மபுரி ஆயர் இல்லத்திற்கு எச்சரிக்கை விடுக்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை