திருக்குறள் உண்மை உரை வழி திருக்குறள் அறத்துப்பால் அதிகாரம் 27 ‘தவம்’ (உடலை வாட்டும் துறவறப் பயிற்சி)
குறள் 268: “தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல் லாம் தொழும்”
பொருள்: தவ வலிமையால் தன்னுடைய உயிர், தான் எனும் பற்றும் அகங்காரமும் நீங்கப் பெற்றவனை மற்ற எல்லா மக்களும் தொழுவர் எனப்படுகிறது. அப்படியே திருமறையும் யோவான் 10: 15ல் “நான் என்.. ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்.” என்றும், யோவான் 10: 18ல்”ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மறுபடியும் எடுத்துக்கொள்ளவும் எனக்கு அதிகாரமுண்டு…” என்றும், பிலிப்பியர் 2:7-1 0ல் “தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.” என்றும், பிலிப்பியர் 2: 9-10 ல்”ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி(னார்),
இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்(படிக்கும்),” என்றும்
திருக்குறளும் திருமறையும் தவம் எனும் துறவற நற்பண்பை ஒரேவிதமாய் வலியுறுத்தப் படுவதை அறியலாம்.
இவண் பேராசிரியர் இறைமொழியன் லூர்துசாமி திருக்குறள் உண்மை உரை பேரவை