இலவச கேஸ் இணைப்பு மானியத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் !

புதுடெல்லி:
மூன்று ஆண்டுகளில் 2023-24 நிதியாண்டு முதல் 2025-26 வரையிலான 75 லட்சம் சமையல் எரிவாயு இணைப்புகளை விடுவிப்பதற்காக பிரதமரின் இலவச எரிவாயு இணைப்புத் திட்டத்தை நீட்டிக்க பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2023-24 நிதியாண்டு முதல் 2025-26 வரையிலான மூன்று ஆண்டுகளில் 75 லட்சம் சமையல் எரிவாயு இணைப்புகளை விடுவிப்பதற்காக பிரதமரின் இலவச எரிவாயு இணைப்புத் திட்டத்தை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

14.2 கிலோ ஒரு சிலிண்டர் இணைப்பு – ஒரு இணைப்புக்கு ரூ.2200, 5 கிலோ இரட்டை சிலிண்டர் இணைப்பு – ஒரு இணைப்புக்கு ரூ.2200, 5 கிலோ ஒரு சிலிண்டர் இணைப்பு – ஒரு இணைப்புக்கு ரூ.1300, உஜ்வாலா 2.0-ன் தற்போதைய முறைகளின்படி, இலவச எரிவாயு திட்டப் பயனாளிகளுக்கு முதலில் சிலிண்டர் மற்றும் அடுப்பு இலவசமாக வழங்கப்படும்.

14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ஆண்டுக்கு 12 மறு நிரப்புதல்களுக்கு ரூ.200 மானியம் வழங்கப்படுகிறது. பிரதமரின் இலவச எரிவாயு திட்டத்தில் தொடராமல் போனால், தகுதியான ஏழைக் குடும்பங்கள் இத்திட்டத்தின் கீழ் உரிய பயன்களைப் பெற முடியாமல் விடுபட்டு போகலாம். எனவே ஏழைக் குடும்பங்களுக்கான சமையல் எரிவாயு இணைப்புகள், சமையல் எரிபொருளை அணுக உதவியாக இருக்கும். பாரம்பரிய சமையல் எரிபொருளான விறகு, நிலக்கரி, மாட்டு சாணம் போன்றவற்றைப் பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் ஏற்படாமல் சரி செய்ய உதவுகிறது. இது பெண்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும், மரம் சேகரிப்பதில் ஏற்படும் சிரமத்தை நீக்குவதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படும் மற்றும் சமையல் எரிபொருள் கிடைக்காததைத் தடுக்கும்.

சில தகுதிவாய்ந்த குடும்பங்களுக்கு இன்னும் சமையல் எரிவாயு இணைப்பு இல்லை. இதற்கு பல காரணங்கள் உள்ளன. மக்கள்தொகை அதிகரித்துள்ளது, திருமணங்கள், இடம்பெயர்வு, விடுபட்ட வீடுகள், மிகவும் தொலைதூர இடங்கள் போன்றவற்றால் ஒவ்வொரு ஆண்டும் புதிய குடும்பங்கள் உருவாகின்றன. 2023, ஆகஸ்ட் 31ம் தேதி நிலவரப்படி 15 லட்சம் பிரதமரின் இலவச எரிவாயு இணைப்புகளுக்கான தேவை உள்ளது என்று மத்திய அரசு கூறியுள்ளது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400