சென்னை:
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை உடனே உயர்த்தி வழங்க வேண்டும். உதவித் தொகை கேட்டு விண்ணப்பித்து காத்திருக்கும் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உடனடியாக உதவித் தொகை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் மற்றும் பராமரிப்பாளர்கள் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் ஏராளமான அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். காவல்துறை சார்பில் சிறந்த அளவில் பாதுகாப்பு வழங்கபபட்டது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு காவல்துறையினர் தண்ணீர் பாட்டில்களை வழங்கினர்.

உதவித்தொகையை உயர்த்தி வழங்க கோரி சைதாப்பேட்டையில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சென்னை:மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை உடனே உயர்த்தி வழங்க வேண்டும். உதவித் தொகை கேட்டு விண்ணப்பித்து






