அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் மின்வாரியத்தில் 20 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றுகின்றநிலையில் கடந்த கால ஆட்சிகளில் அவர்களுடைய உழைப்பை வீணடித்து அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாகக்கிய நிலையில் தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உரிய தீர்வுகாணாத நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியில் இல்லை என கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது எனவே நீதிமன்ற உத்தரவுபடி அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் விரைவாக பணிநிரந்தரம் செய்ய முதல்வர் உரிய வேண்டுவது சம்பந்தமாக மின்துறை அமைச்சர் பேச்சுக்கு டி.என்.ஈ.பி தொழிலாளர் நல முன்னேற்ற சங்கம் எதிர்ப்பு ஊடகவியலாளர்கள் தொழில்நுட்ப ரீதியாக தங்களை நவீனப்படுத்திக்கொள்வது அவசியம்: பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தென் மண்டல தலைமை இயக்குனர் வலியுறுத்தல் பிரதமர் திரு நரேந்திர மோடி, நியூசிலாந்து பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தினார் மத்திய அரசின் பல்வேறு பணிகளுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு

ஊடகவியலாளர்கள் தொழில்நுட்ப ரீதியாக தங்களை நவீனப்படுத்திக்கொள்வது அவசியம்: பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தென் மண்டல தலைமை இயக்குனர் வலியுறுத்தல்

புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை மற்றும் இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் பத்திரிகை தகவல் அலுவலகம் இணைந்து, புதுச்சேரியில் பத்திரிகையாளர்களுக்கான ஒருநாள் பயிலரங்கை இன்று (10 ஜூலை 2026) நடத்தின. ‘செயற்கை நுண்ணறிவு மூலம் போலிச் செய்திகளைக் கண்டறிதல்’ எனும் தலைப்பில் இப்பயிலரங்கு நடைபெற்றது.

இப்பயிலரங்கில் நோக்கவுரையாற்றிய பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தென் மண்டல தலைமை இயக்குனர் திரு. வை. பழனிச்சாமி, இன்றைய காலகட்டமானது புதுமை மற்றும் தனித்துவமிக்க ஒரு காலகட்டமாக (Age of Innovation and Age of Specialization) விளங்குவதால், அதற்கு ஏற்ப ஊடகவியலாளர்கள் தங்களைத் தொழில்நுட்ப ரீதியாகவும், அறிவுபூர்வமாகவும் தயார்படுத்திக்கொள்வது காலத்தின் கட்டாயமாகும் என்று தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், பரபரப்பான பிரேக்கிங் செய்திகள் கலாச்சாரத்திற்கு மத்தியில், செய்திகள் ஏதோ ஒரு தற்காலிக மாற்றத்தை ஏற்படுத்திவிட்டுச் செல்வது வெற்றியல்ல என்றும், எந்தவொரு தேவையற்ற விளைவுகளுக்கும் இடம் தராமல் செய்தியின் உண்மைத்தன்மை மாறாமல் சாதாரண மக்களுக்கும் சமூகத்தின் கடைக்கோடி மனிதனுக்கும் சரியான செய்தியை துல்லியமாகக் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். புதிய கண்டுபிடிப்புகளின் தன்மையையும் வரலாற்றையும் முழுமையாக அறிந்துகொண்டு செய்திகளை அணுகும் ஆற்றலை ஊடகவியலாளர்கள் வளர்த்துக்கொள்வது அத்தியாவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.

இப்பயிலரங்கில் சிறப்புரையாற்றிய இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் சென்னை மண்டல அலுவலர் திரு. வீரேந்திர சாம்பியால், புதுச்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கான முக்கிய நெடுஞ்சாலை உள்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். மாமல்லபுரம் முதல் புதுச்சேரி வரையிலான 108 கி.மீ நெடுஞ்சாலை (NH-332A) நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு வருவதாகவும், இத்திட்டம் முழுமையடையும் போது சென்னை – புதுச்சேரி இடையேயான பயண நேரம் 4 மணி நேரத்திலிருந்து 3 மணி நேரமாகக் குறையும் என்றும் தெரிவித்தார். மேலும், 180 கி.மீ நீளமுள்ள விழுப்புரம் – புதுச்சேரி – நாகப்பட்டினம் நெடுஞ்சாலைப் பணிகள் டிசம்பர் 2026-க்குள் முடிக்கப்பட்டு பயண நேரம் 2.5 மணி நேரம் வரை குறையும் என்றும் அவர் கூறினார். புதுச்சேரி நகர்ப்புற உள்கட்டமைப்பைப் பொறுத்தவரை, இந்திரா காந்தி சதுக்கம் மற்றும் ராஜீவ் காந்தி சதுக்கத்தை இணைக்கும் 3.88 கி.மீ நீளமுள்ள மேம்பாலப் பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு 30 மாதங்களில் நிறைவடையும் என்றும், ஜிப்மர் மருத்துவமனைக்கு எதிரே ரூ.2.24 கோடி மதிப்பில் மின்தூக்கி  வசதியுடன் கூடிய நடை மேம்பாலம் அமைக்கப்பட்டு வருவதாகவும் திரு. வீரேந்திர சாம்பியால் குறிப்பிட்டார்.

பயிலரங்கின் நிறைவு விழாவில் புதுச்சேரியின் முதலமைச்சர் திரு. ந. ரங்கசாமி முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு, பயிலரங்கில் பங்கேற்ற ஊடகவியலாளர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கிச் சிறப்பித்தார்.

முன்னதாக நடைபெற்ற தொடக்க விழாவில், முதலியார்பேட்டை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. ஜான் குமார் பயிலரங்கினைத் தொடங்கி வைத்து முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில், புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறையின் இயக்குனர் திரு. ஏ. சுரேஷ்ராஜ் வரவேற்புரை ஆற்றினார். புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை அரசுச் செயலர் திரு. முகமது அஹ்சன் அபித் வாழ்த்துரை வழங்கினார். தொழில்நுட்ப அமர்வில் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் இதழியல் துறை உதவிப் பேராசிரியர் திரு. ஹபீப் ரஹ்மான், ‘செயற்கை நுண்ணறிவு யுகத்தில் செய்திகளின் உண்மைத்தன்மை சரிபார்ப்புக்கு உதவும் மேம்பட்ட நவீன இணையதளங்கள், கருவிகள் மற்றும் வழிகள்’ குறித்துப் செயல்விளக்கப் பயிற்சியளித்தார். சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் இயக்குனர் திரு. ப. அருண்குமார் நன்றியுரை ஆற்றினார்.

மின்வாரியத்தில் 20 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றுகின்றநிலையில் கடந்த கால ஆட்சிகளில் அவர்களுடைய உழைப்பை வீணடித்து அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாகக்கிய நிலையில் தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உரிய தீர்வுகாணாத நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியில் இல்லை என கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது எனவே நீதிமன்ற உத்தரவுபடி அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் விரைவாக பணிநிரந்தரம் செய்ய முதல்வர் உரிய வேண்டுவது சம்பந்தமாக

மின்வாரியத்தில் 20 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றுகின்றநிலையில் கடந்த கால ஆட்சிகளில் அவர்களுடைய

ஊடகவியலாளர்கள் தொழில்நுட்ப ரீதியாக தங்களை நவீனப்படுத்திக்கொள்வது அவசியம்: பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தென் மண்டல தலைமை இயக்குனர் வலியுறுத்தல்

புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை மற்றும் இந்திய அரசின் தகவல் மற்றும்

மத்திய அரசின் பல்வேறு பணிகளுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு

மத்திய அரசின் பல்வேறு பணிகளுக்கான நேரடி ஆட்சேர்ப்புக்காக, தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து யுபிஎஸ்சி விண்ணப்பங்களை