சென்னையில் நாளை மறுநாள் துவங்க உள்ள ஊடகவியலாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் ராஜ் தொலைக்காட்சி சார்பில் பங்கேற்க உள்ள வீரர்களுக்கு ஜெர்சி அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் ராஜ் தொலைகாட்சியின் இயக்குனர் ரவீந்திரன், நமது சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட வீரர்களுக்கான ஜெர்சியை அறிமுகபடுத்தி, கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து தனது மகிழ்சியை பகிர்ந்து கொண்டார். இந்நிகழ்வின் போது நமது சங்கத்தின் துணை தலைவர் கமலபதி, ராஜ் தொலைக்காட்சி சார்பில் களம் இரங்க உள்ள கிரிக்கெட் வீரர்கள் விஜய் சங்கர், சிவானந்தம், ஸ்ரீதர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.







