பிளஸ்2 தேர்ச்சி பெற்றவர்கள் ஐந்தாண்டு சட்டப் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 10ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. விருப்பம் உள்ள மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என சட்ட பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.

தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ்  தமிழ்நாடு முழுவதும்,  15 அரசு, 9 தனியாா் சட்டக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 5 ஆண்டு கால சட்டப் படிப்புகளில் 2,043 இடங்கள் உள்ளன. இதேபோல், பல்கலைக்கழகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள சீா்மிகு சட்டப் பள்ளியில் 5 ஆண்டுகால சட்டப் படிப்புகளுக்கு 624 இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான பொது கலந்தாய்வு இணையவழியில் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, நிகழ் கல்வியாண்டு (2023-2024) சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கியுள்ளது. இதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவை தமிழ்நாடு அம்பேத்கா் சட்டப் பல்கலை. துணைவேந்தா் என்.எஸ்.சந்தோஷ்குமாா் நேற்று (ஏப்ரல் 10ந்தேதி) தொடங்கி வைத்தாா்.

விருப்பமுள்ளவா்கள் இணையதளத்தில் மே 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், கலந்தாய்வும் இணையதளம் வழியாகவே நடைபெறவுள்ளது. பிளஸ் 2 வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடத்தப்படும். விண்ணப்பதாரர்கள் வழங்கும் தகவல் அடிப்படையில் மட்டுமே தர வரிசை மற்றும் வெட்டு மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும்.v விண்ணப்பதாரர்கள் சீர்மிகு சட்டப் பள்ளி மற்றும் இணைவுப் பெற்ற சட்டக் கல்லூரிகளில் வழங்கும் பட்டப்படிப்புகளுக்கு தனித் தனி விண்ணப்படிவங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், இதுகுறித்த கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் அறியலாம் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

இந்திப் பேயை விரட்டி – அன்னைத் தமிழ் காக்க தன்னுயிர் ஈந்த சிவா திலீபனுக்கு வீரவணக்கம்!

இந்தி ஏகாதிபத்தியமாக ஆதிக்கம் செலுத்தும் இந்திய ஏகாதிபத்தியத்தின் இந்தித் திணிப்பு – தமிழ்நாட்டில்

ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் தலைமையில், தேர்தல் நடத்தும் அலுவலர் ,காவல் துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, ஆயிரம்விளக்கு சட்டமன்றத் தொகுதி, தேர்தல்

போராளி உயிரிழப்பு!

சென்னை பார்க் ரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி, இந்தித் திணிப்புக்கு எதிரான

சென்னை மாவட்டத்தில் வங்கி பணப் பரிவர்த்தனைகளை கண்காணிப்பது குறித்தும்,தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை செயல்படுத்துவது குறித்தும்வங்கி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடுசட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026னை முன்னிட்டு, சென்னை