பெருநகர சென்னை மாநகராட்சியுடன் திசை தொண்டு அறக்கட்டளை இணைந்து சென்னை மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளில் நீட் தேர்வு எழுதுவதற்கு ஆர்வமுள்ள மாணவ, மாணவிகளுக்கு முதற்கட்டமாக நடத்தும் கட்டணமில்லா நீட்தேர்வு பயிற்சிக்கான தொடக்க மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சியை மேயர் ஆர்.பிரியா ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள ஆலோசனைக் கூடத்தில் தொடங்கி வைத்தார். இதில் துணை மேயர் மு.மகேஷ்குமார், நிலைக்குழு தலைவர் (கல்வி) த.விசுவநாதன், துணை ஆணையர் (கல்வி), ஷரண்யா அறி, திசை தொண்டு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ச.பரத், துணை நிர்வாக அறங்காவலர் பிரவீண்குமார், கல்வி அலுவலர், உதவி கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.