கருகிய நெற்பயிர்களுக்கு அரசு இழப்பீடு வழங்க பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

தண்ணீர் இல்லாமல் கருகிய குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில்:-

காவிரியில் போதிய அளவு தண்ணீர் வராததால், காவிரி பாசன மாவட்டங்களில் பயிரிடப்பட்டிருந்த குறுவை நெற்பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளன. காவிரியில் தண்ணீர் திறப்பதற்கு கண்களுக்கு எட்டிய வரை எந்த வாய்ப்புகளும் தென்படாததால், அரும்பாடுபட்டு வளர்த்த குறுவை நெற்பயிர்களைக் காப்பாற்ற முடியவில்லையே என்ற கவலையிலும் விவசாயிகள் ஆழ்ந்துள்ளனர். காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்வதற்காக, மேட்டூர் அணையிலிருந்து தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நடப்பாண்டிலும் ஜூன் 12 ஆம் நாள் தண்ணீர் திறக்கப்பட்டதால், வழக்கத்தை விட அதிகமாக 5.10 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் குறுவை பருவ நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்டன. ஆனால், தென்மேற்கு பருவமழை பொய்த்ததால், கர்நாடக அணைகளில் இருந்து எதிர்பார்த்த அளவுக்கு தண்ணீர் திறக்கப்படாததால், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே குறுவைப் பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்கவில்லை. இயற்கை கை கொடுத்தாலோ, சுப்ரீம் கோர்ட்டு நீதி வழங்கினாலோ, குறுவை பயிர்களை பெரிய அளவில் பாதிப்பின்றி காப்பாற்றி விடலாம் என்று விவசாயிகள் நம்பிக் கொண்டிருந்த நிலையில் எல்லா வாய்ப்புகளும் நழுவி விட்டன; நம்பிக்கைகள் பொய்த்து விட்டன. மேட்டூர் அணையிலிருந்து கடந்த சில வாரங்களாகவே வினாடிக்கு 8000 கன அடிக்கும் குறைவான தண்ணீர் தான் திறந்து விடப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக இந்த அளவு 6503 கன அடியாக குறைக்கப்பட்டு விட்டது. இதனால், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேரவில்லை. இன்றைய நிலையில், குறுவைப் பயிர்களைக் காப்பாற்ற வேண்டுமானால், வினாடிக்கு குறைந்தது 15,000 கன அடி வீதம் காவிரியில் நீர் திறந்து விட வேண்டும். ஆனால், அதற்கு சிறிதளவு கூட வாய்ப்பு இல்லை. மேட்டூர் அணையில் நீர்மட்டம் இன்று காலை 46 அடிக்கு கீழாகவும், அணையின் நீர் இருப்பு 15 டி.எம்.சிக்கு கீழாகவும் குறைந்து விட்டன. மேட்டூர் அணையின் நீர்வரத்தும் வினாடிக்கு 3000 கன அடிக்கும் கீழ் சென்று விட்டது. இத்தகைய சூழலில் மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் இன்னும் ஒரு சில நாட்களுக்குக் கூட தண்ணீர் திறந்து விடப்படுவதற்கு வாய்ப்புகளே இல்லை. கர்நாடகத்தில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 4 அணைகளிலும் சேர்த்து 64 டி.எம்.சி தண்ணீர் இருப்பதால் அம்மாநில அரசு மனம் வைத்தால் குறுவைப் பயிர்களைக் காப்பாற்ற முடியும். ஆனால், வினாடிக்கு 5000 கன அடி வீதம் திறக்கப்படும் தண்ணீரையே, செப்டம்பர் 12 ஆம் நாளுக்குப் பிறகு வழங்க முடியாது என்று கர்நாடகம் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. காவிரி சிக்கலில் கடைசி நம்பிக்கையாக இருந்த சுப்ரீம் கோர்ட்டும், காவிரி வழக்கை இம்மாதம் 21 ஆம் நாளுக்கு ஒத்திவைத்து விட்டதால், இப்போதைக்கு குறுவை பயிர்களைக் காப்பாற்ற அரசிடமும், விவசாயிகளிடமும் எந்த தீர்வும் இல்லை. காவிரி பாசன மாவட்டங்களில் 5 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் குறுவை நெற்பயிர்கள் பயிரிடப்பட்டிருந்த நிலையில், இதுவரை சுமார் 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மட்டுமே அறுவடை நடைபெற்றுள்ளது. மீதமுள்ள 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்களை காப்பாற்றுவதற்கு வழியே இல்லை. குறுவைப் பயிர்கள் காப்பாற்றப்படாவிட்டால், விவசாயிகளுக்கு பேரிழப்பு ஏற்படக்கூடும். கடந்த மூன்று ஆண்டுகளாகத் தான் காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி ஓரளவு வெற்றியாக நடைபெற்று வருகிறது. அதற்கு முன் காவிரியில் தண்ணீர் கிடைக்காததால் தொடர்ந்து 8 ஆண்டுகள் உழவர்கள் பேரிழப்பை எதிர்கொண்டனர். காவிரி பாசன மாவட்டங்களின் விவசாயிகளுக்கு அதேநிலை மீண்டும் ஏற்படக்கூடாது. உழவர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படாமல் அரசு தான் தடுக்க வேண்டும். காவிரியில் தண்ணீர் இல்லாததால் இரண்டு லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை பயிர்கள் கருகும் நிலையில், அறுவடை செய்யப்பட்ட பகுதிகளிலும் கூட தண்ணீர் பற்றாக்குறை காரணமாக போதிய விளைச்சல் கிடைக்கவில்லை. காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக ஆய்வு செய்து வரும் வேளாண்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்ற கலந்தாய்வுக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்ட போதிலும் கூட, எந்த முடிவும் எட்டவில்லை . இது காவிரி பாசன மாவட்ட விவசாயிகளுக்கு மிகுந்த வேதனையில் உள்ளனர். கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியில் என்.எல்.சி நிறுவனத்தால் குறுவை பயிர்கள் அழிக்கப்பட்ட போது ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதையே அளவுகோலாகக் கொண்டு தண்ணீர் இல்லாமல் கருகிய குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். விளைச்சல் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கும், பாதிப்பின் மதிப்பை கணக்கிட்டு உரிய இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என் டாக்டர். ராமதாஸ தெரிவித்து உள்ளார்.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர

கொல்கத்தாவில் வளர்ச்சித் திட்டங்களின் துவக்க விழாவில் பிரதமர்

ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களே, மத்திய அமைச்சர்கள் சாந்தனு தாக்கூர் அவர்களே,  சுகந்தா மஜும்தார் அவர்களே, மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர்  சுபேந்து அதிகாரி அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் சமிக் பட்டாச்சார்யா அவர்களே, இதர மக்கள் பிரதிநிதிகளே, தாய்மார்களே, அன்பர்களே,இன்று, கொல்கத்தாவின் மண்ணிலிருந்து, மேற்கு வங்கம் மற்றும் கிழக்கு இந்தியாவிற்கான வளர்ச்சியின் புதிய அத்தியாயம் எழுதப்படுகிறது. சுமார் 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சாலை, ரயில்வே மற்றும் துறைமுக உள்கட்டமைப்புத் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் மேற்கு வங்கம் மற்றும் கிழக்கு இந்தியாவிற்கு புதிய உத்வேகத்தை அளிக்கும், வர்த்தகம் மற்றும் தொழில்துறையை மேம்படுத்தும், லட்சக் கணக்கான மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதுடன், அவர்களுக்குப் புதிய வாய்ப்புகளை வழங்கும். கரக்பூர்-மோரேகிராம் விரைவுச் சாலைப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும். துப்ராஜ்பூர் புறவழிச்சாலை மற்றும் காங்ஷாபதி மற்றும் ஷிலாபதி ஆறுகளின் மீது கட்டப்படும் பெரிய பாலங்கள், இணைப்பை மேலும் மேம்படுத்தும். இந்தத் திட்டங்களுக்காக மேற்கு வங்கம் மற்றும் கிழக்கு இந்திய மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நண்பர்களே,இன்று, நாட்டில் ரயில்வேயை நவீனமயமாக்குவதற்கான ஒரு விரைவான பிரச்சாரம் நடந்து வருகிறது. இந்தப் பிரச்சாரத்தில் மேற்கு வங்கம் பின்தங்கியிருக்கக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்! எனவே, மேற்கு வங்கத்தின் ரயில்வே உள்கட்டமைப்பை விரிவுபடுத்த மத்திய அரசு வலுவான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இன்று, கலைகுண்டா மற்றும் கனிமஹுலி பிரிவுகளில் தானியங்கி தொகுதி சமிக்ஞை அமைப்பு நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது பரபரப்பான ரயில் பாதைகளின் திறனை அதிகரிக்கும், பயணத்தை பாதுகாப்பானதாக்கும், மேலும் பயணிகளுக்கு வேகத்தையும் வசதியையும் அதிகரிக்கும்.நண்பர்களே,இன்று, காமாக்யா குடி, அனாரா, தம்லுக், ஹால்டியா, பரபும் மற்றும் சியுரி ஆகிய ஆறு நிலையங்கள் அம்ரித் நிலையங்களாகப் புனரமைக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையங்களில் வங்கத்தின் சிறந்த கலாச்சாரம் இப்போது இன்னும் பிரகாசமாக மிளிர்கிறது. இங்கு மேலும் பல நிலையங்களும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு வருகின்றன. புருலியா மற்றும் ஆனந்த் விஹார் முனையத்திற்கு இடையே ஒரு புதிய எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவை மேற்கு வங்க மக்களுக்கு மட்டுமல்ல, ஜார்க்கண்ட், பீகார், உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லி மக்களுக்கும் பயனளிக்கும்.சாலை மற்றும் ரயில் இணைப்பு போலவே, துறைமுகங்கள் மற்றும் நீர் போக்குவரத்தும் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. பல தசாப்தங்களாக, இந்த விஷயத்தில் கிழக்கு இந்தியாவின் ஆற்றல் புறக்கணிக்கப்பட்டது. ஆனால் இன்று, நீர்வழிகள் வர்த்தகம் மற்றும் தொழில்துறை முன்னேற்றத்திற்கான புதிய பாதைகளைத் திறக்கின்றன. இந்த திசையில், முக்கியமான துறைமுக உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன, நிறைவடைந்தவை, தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. கொல்கத்தா மற்றும் ஹால்டியா போன்ற துறைமுகங்கள் நீண்ட காலமாக கிழக்கு இந்தியாவில் முக்கிய வர்த்தக மையங்களாக உள்ளன. ஹால்டியா கப்பல்துறை வளாகம் இயந்திரமயமாக்கப்பட்டு வருகிறது. இது சரக்கு நடவடிக்கைகளை விரைவுபடுத்தும், துறைமுக திறனை அதிகரிக்கும் மற்றும் வர்த்தகத்திற்கான புதிய வசதிகளை உருவாக்கும். கொல்கத்தா கப்பல்துறை அமைப்புமுறையில் உள்ள பாஸ்குல் பாலத்தின் புதுப்பித்தல் பணியும் நடைபெற்று வருகிறது. கிதர்பூர் கப்பல்துறையில் சரக்கு கையாளும் திறனை அதிகரிப்பதிலும் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த திட்டங்கள் அனைத்தும் கிழக்கு இந்தியாவின் தளவாட அமைப்பை வலுப்படுத்தும்.நண்பர்களே,சாலைகள், ரயில்வே மற்றும் துறைமுகங்கள் தொடர்பான இந்தப் புதிய திட்டங்கள் மேற்கு வங்கத்தின் நவீன எதிர்காலத்திற்கான புதிய பாதைகளைத் திறக்கின்றன. விவசாயிகள், வர்த்தகர்கள், தொழில்முனைவோர், மாணவர்கள் அனைவரும் பயனடைவார்கள். சுற்றுலா போன்ற துறைகளிலும் புதிய வாய்ப்புகள் உருவாகும். உள்ளூர் தொழில்கள் மற்றும் சேவைகள் வேகம் பெறும். இந்தியாவை எப்போதும் வழிநடத்தி வரும் மேற்கு வங்கம், ‘வளர்ச்சியடைந்த மேற்கு வங்கமாக’ மீண்டும் அந்த பெருமையை அடைய வேண்டும் என்பதே எங்கள் உறுதி. வலுவான இணைப்பு மற்றும் நவீன உள்கட்டமைப்பு ஒரு வளர்ந்த மாநிலத்தின் அடித்தளத்தை உருவாக்கும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். இந்த விருப்பத்துடன், இந்த வளர்ச்சித் திட்டங்களுக்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது, இந்த அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி முடிவடைந்தவுடன், மாநில மக்கள்  கூடியிருக்கும் திறந்தவெளி மைதானத்திற்குச் செல்வேன். மேற்கு வங்க மக்களைச் சந்தித்து அவர்களிடையே மிக முக்கியமான பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைக்கும். 

பி.கே.சேகர்பாபு திரு.வி.க.நகர் மண்டலத்தில் கட்டப்பட்ட பல்நோக்கு மையக் கட்டடத்தில் உள்ள நியாய விலைக் கடையினைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி,இன்று மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும்,சென்னைப்