கர்நாடகா அணை கட்டுவதை தமிழ்நாடு அரசு முறியடிக்கும் : எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்…

சென்னை: கர்நாடகாவின் அணை கட்டும் முயற்சியை தமிழக அரசு முறியடிக்கும் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் வழங்குவது மற்றும் மேகதாது அணை பிரச்னை குறித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அளித்த செய்திகளுக்கு பதில் அளித்து நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு மேகதாது அணை கட்டுவதற்கு ஒருபோதும் கர்நாடகாவை அனுமதிக்காது. கர்நாடக அரசு உத்தேசித்துள்ள மேகதாது அணை திட்டம் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு முரணானது. இத்திட்டம் குறித்து, எற்கனவே தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமரை நேரில் சந்தித்தபோது மேகதாது அணை கட்டுவதற்கு ஒன்றிய அரசு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்தியுள்ளார்.

நானும், ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை சந்திக்கும்போதெல்லாம் இக்கருத்தை வலியுறுத்தியுள்ளேன். ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரும் தமிழ்நாட்டின் இசைவில்லாமல் மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி வழங்கப்படாது எனக் கூறியுள்ளார். இதற்கிடையே, தமிழ்நாடு அரசு இப்பிரச்னை குறித்து தொடர்ந்துள்ள வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. தவிர, மேகதாது அணை திட்டம் குறித்த பொருள் பற்றி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வலியுறுத்திய போதெல்லாம் தமிழ்நாடு அரசு மறுப்பு தெரிவித்ததை அடுத்து, 10.02.2023, 11.04.2023 மற்றும் 16.06.2023 நாளில் நடைபெற்ற ஆணையத்தின் கூட்டங்களில் இப்பொருள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இத்திட்டம் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போது, வலுவான வாதங்களை முன் வைத்து கர்நாடகாவின் அணை கட்டும் முயற்சிகளை அரசு முறியடிக்கும்.

கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் கடந்த 20ம் தேதி ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கு எழுதிய கடித்தத்தில், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு விரைவாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த விவகாரம் தொடர்பாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஆலோசனை நடத்தினார். இந்தநிலையில், காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட அனுமதிக்கக்கூடாது என ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரிடம் வலியுறுத்துவதற்காக அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லி பயணம் மேற்கொள்ள உள்ளார். நீர்வளத்துறை உயர் அதிகாரிகளும் உடன் செல்கின்றனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.