காணாமல் போன சிறுவர்களை ட்ரோன் மூலம் தேடும் பணி தீவிரம் – நீலகிரியில் பரபரப்பு…

நீலகிரி மாவட்டம் ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு பழங்குடியின சிறுவர்களான இருவர் காணாமல் போனதை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சிறார்களை தேடிய போலீசார் வனப்பகுதிக்குள் சிறுவர்கள் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், டிரோன் மூலம் முதுமலை வனப்பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், வனத்துறையினர் மற்றும் காவல் நக்சல் தடுப்பு பிரிவினர் குழுக்களாக பிரிந்து தேடும் பணியில் உள்ளனர்.

நீலகிரி மாவட்டம் ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட ஓடக்கொல்லி பகுதியை சேர்ந்த பழங்குடியின தம்பதி கடந்த மாதம் 29-ம் தேதி தேன் எடுப்பதற்காக முதுமலை வனப்பகுதிக்குச் சென்றனர். அப்போது தங்களின் 5 வயது மகன், 10 வயது மகள் ஆகியோரை உறவினர்களிடம் விட்டுச்சென்றனர். இதையடுத்து 30ம் தேதி முதல் தம்பதியின் பிள்ளைகளான 2 சிறுவர்களையும் காணவில்லை. இதனால் 2 சிறுவர்களையும், குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி பழங்குடியின மக்கள் பல இடங்களுக்கு சென்று தேடியும் காணவில்லை. ஆனால் 2 நாட்களாகியும் சிறுவர்களை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து கூடலூர் காவல்துறை மற்றும் முதுமலை வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இது தொடர்பாக கூடலூர் காவல்துறையினர் பல கோணங்களில் விசாரணை நடத்தினர்.

மேலும் பெற்றோர் தேன் எடுக்க முதுமலை வனப்பகுதிக்குள் சென்றதால் அவர்களை தேடி 2 சிறுவர்களும் வனப்பகுதிக்குள் சென்றிருக்கலாம் என காவல்த்துறையினர் மற்றும் வனத்துறையினர் சந்தேகித்து சிறுவர்களை வனப்பகுதியில் தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று கூடலூர் காவல் துணை கண்காணிப்பாளர் செல்வராஜ், ஆய்வாளர் சாகுல் ஹமீது, நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் வனத்துறையினர்
55 பேர் 6 பிரிவுகளாக பிரிந்து முதுமலை வனப்பகுதிக்குள் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து இன்று .டிரோன் மூலம் ஓடக்கொல்லி மற்றும் முதுமலை வனப்பகுதியில் சுமார் 8 கி.மீ தூரம் வானில் பறக்கவிட்டு தேடும் பணி நடைபெற்றது. அதேப்போல் வனத்துறையினர், காவல் நக்சல் தடுப்பு பிரிவினர் குழுக்களாக பிரிந்து தேடும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.