தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி ஆர் பாண்டியன் தலைமையில் சென்னை வி கே வி துரைசாமி திருவாரூர் குடவாசல் சரவணன் சைதை சிவா சக்திவேல் ஆகியோர் இடம் பெற்ற குழு தமிழ்நாடு அரசு காவிரியின் குறுக்கே கர்நாடகம் மேகதாட்டு அணை கட்டுவதை தடுத்து நிறுத்தி இராசிமணல் அணை கட்டுவதற்கான திட்டத்தை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என வலியுறுத்தி நீர் பாசன துறை அமைச்சர் க. துரைமுருகன் அவர்களை அவரது இல்லத்தில் இன்று மாலை 6:00 மணிக்கு சந்தித்து பேசினோம். கோரிக்கை மனுவை கொடுத்தோம். சட்டமன்றத்தில் ராசி மணல் அணையின் முக்கியத்துவம் குறித்து கலைஞர் பேசிய உரைகளை தொகுத்து அளித்தோம். அனைத்தையும் பெற்றுக் கொண்ட அமைச்சர் அனைத்தையும் படித்து சந்தேகங்களை தெளிவுபடுத்திக்கொண்டுமுதலமைச்சர் வெளிநாட்டில் இருந்து திரும்பிய பிறகு இது குறித்து உரிய முடிவை எடுப்பார் அவரிடம் இத்திட்டம் குறித்து எடுத்துரைப்பேன் என்றார் முல்லைப் பெரியாறு அணையில் மத்திய அரசின் நடவடிக்கை குறித்து வருத்தம் தெரிவித்தவர் தொடர்ந்து நான்கு கடிதங்கள் கேரளா அரசுக்கு எழுதி உள்ளதாகவும் அதனை நிறைவேற்ற கேரளாவிற்கு முன்வரவில்லை என்கிற வருத்தத்தையும் வெளியிட்டார்.
