அண்மை செய்தி
திருக்குறள் உண்மை உரையும் வரலாற்று ஆதாரங்களும் உலக புகழ்பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலய 444-ம் ஆண்டு பெருவிழா சிவகங்கை அருகே 40 வயது நபருக்கு நேர்ந்த கொடூரம் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது. தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காவிரி டெல்டா விவசாயிகள் கவலை – நெற்பயிரை காப்பாற்ற முடியுமா ?

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து போதிய நீர்வரத்து இல்லாததால், மேட்டூர் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது. இதனால், குறுவை நெற்பயிரை காப்பாற்ற முடியுமா என காவிரி டெல்டா விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

கேரளம், கர்நாடக மாநிலங்களில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து தமிழகத்துக்கு வரும் நீர், மேட்டூர் அணையில் தேக்கி வைக்கப்பட்டு, டெல்டா மாவட்டங்களில் பாசனத்துக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களின் குடிநீர் தேவைக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நடப்ஆண்டில் ஜூன் 12-ம் தேதி காவிரி டெல்டா மாவட்ட பாசனத்துக்காக மேட்டூர் அணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். அன்று அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 867 கன அடியாகவும், நீர்மட்டம் 103 அடியாகவும் இருந்தது. அன்று முதல் அணையிலிருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது, மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக குறைந்தது வருகிறது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த 13 நாட்களில் 11 அடி குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 94 அடியாக உள்ளது. நீர்வரத்து 223 கனஅடியாக உள்ள நிலையில், தொடர்ந்து 10 ஆயிரம் கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டு வருகிறது.

டெல்டா மாவட்ட பாசனத்துக்காக கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் திறக்கபடுகிறது. கல்லணைக் கால்வாய் ஆற்றில் பல இடங்களில் புனரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. அதனால், அதில் விநாடிக்கு ஆயிரம் கன அடி வீதம் மட்டுமே நீர் திறக்கப்படுவதால், பல்வேறு கிளை வாய்க்கால்களில் இன்னும் நீர் திறக்கப்படவில்லை. இதனால் இந்த பாசனப் பகுதிகளில் இன்னும் குறுவை சாகுபடி தொடங்கப்படாமல் உள்ளது.

மேட்டூர் அணை திறப்பை நம்பி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணியில் விவசாயிகள் இறங்கியுள்ளனர். நிகழாண்டு குறுவை சாகுபடி இலக்காக 5.20 லட்சம் ஏக்கரை வேளாண் துறை நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது. இதற்கேற்ப, குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டமும் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதுவரை டெல்டாவில் 2.50 லட்சம் ஏக்கரில் மட்டுமே நெற்பயிர் நடவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளதாலும், அணையின் நீர்மட்டம் மளமளவென சரிந்து வருவதாலும் குறுவை நெற்பயிரை காப்பாற்ற காவிரியில் போதிய நீர் வருமா என டெல்டா விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

எனவே, ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்துக்கு கர்நாடக அரசு தர வேண்டிய மாதாந்திர நீர்ப் பங்கீட்டை, தமிழக அரசு உடனடியாக கேட்டுப்பெற தர, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை அணுக வேண்டும் என கேட்டுகொண்டனர்.

இதுகுறித்து நீர்வள ஆதாரத் துறை பொறியாளர்கள் தெரிவித்ததாவது:

கேரளம், கர்நாடக மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை பெரிய அளவில் பெய்யவில்லை. இருப்பினும் ஆகஸ்ட் இறுதி வரை அந்த மழை இருக்கும். தற்போதைய நிலையில், மேட்டூர் அணையின் நீர் இருப்பையும், டெல்டாவில் அவ்வப்போது பெய்யும் மழை நீரையும், பம்பு செட்டுகளின் நீரையும் வைத்து குறுவை சாகுபடியை ஓரளவுக்கு சமாளித்து விட முடியும் என்று கூறினார்.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 444-ஆவது ஆண்டுப் பெருவிழா கோலாகலமான கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின்

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை வனத்துறை வெளியேற்றி வருவதைக் கண்டித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டதையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் சுட்டிக்காட்டி மக்களை வெளியேற்றும் வனத்துறையின் நடவடிக்கை, அவர்களின் வாழ்விட உரிமையையும் விவசாய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேனி மாவட்டம் மேகமலைப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி கல்வி அமைச்சக பொறுப்பை ஏற்றுக்கொண்டார் – மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை

மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி இன்று கடமை மாளிகையில் கல்வி அமைச்சகத்தின் பொறுப்பை