பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெருநகர சென்னை
மாநகராட்சி, நீர்வளத்துறை, நெடுஞ்சாலைத்துறை ஆகியவற்றின் சார்பில்
மேற்கொள்ளப்பட்டு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை நகராட்சி நிருவாகம்
மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா,
இ.ஆ.ப., நேற்று (25.06.2023) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பெருநகர சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலத்திற்குட்பட்ட முகலிவாக்கம்
பிரதான சாலையில் நீர்வளத் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர்
வடிகால் அமைக்கும் பணி மற்றும் போரூரில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில்
மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினையும் நகராட்சி
நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலத்திற்குட்பட்ட
ஏ.ஜி.எஸ். காலனியில் உள்ள நீரேற்று நிலையத்தினை தமிழ்நாடு அரசின் தலைமைச்
செயலாளர் முணைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு
மேற்கொண்டார். பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பெருங்குடி மண்டலத்திற்குட்பட்ட மடிப்பாக்கம் வார்டு-186, ஶ்ரீநிவாசா நகர் பிரதான சாலை, வார்டு-187, கார்த்திகேயபுரம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியினை நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு மேற்கொண்டு, பருவ மழைக்கு முன்னதாக அனைத்து பணிகளையும் விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும், கார்த்திகேயபுரம் பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்றிடவும், அந்த
பகுதிகளை சுத்தமாக வைத்துக்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பின்னர், திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட வார்டு-68, கார்த்திகேயன் சாலை,
ஜி.கே.எம். காலனி தெரு, வார்டு-69, ஜம்புலிங்கம் சாலை, ஆகியவற்றில்
மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளையும்
பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மழைநீர் வடிகால் பணிகள் அனைத்தையும் பருவமழைக்
காலத்திற்கு முன்னதாக விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர
அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது, கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர் டாக்டர்
ஜெ. இராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள், இணை ஆணையர் (பணிகள்) டாக்டர்
ஜி.எஸ். சமீரன், இ.ஆ.ப., அவர்கள், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும்
கழிவுநீரகற்று வாரிய செயல் இயக்குநர் திரு. சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன், இ.ஆ.ப.,
அவர்கள், துணை ஆணையாளர்கள் திரு.ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., அவர்கள்,
(மத்திய வட்டாரம்) அவர்கள், திரு.எம்.சிவகுரு பிரபாகரன், இ.ஆ.ப., (வடக்கு வட்டாரம்),
தலைமைப் பொறியாளர் (பொது) திரு.எஸ்.இராஜேந்திரன், சென்னை பெருநகர் குடிநீர்
வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய தலைமைப் பொறியாளர் திரு. வி.ஜி. ராமசாமி,
திரு.வி.க.நகர் மண்டல குழுத் தலைவர் திருமதி சரிதா மகேஷ்குமார், மாமன்ற
உறுப்பினர்கள், மண்டல அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.







