சிறுபால் பண்ணை அமைக்க ரூ.4.19 கோடி; வேளாண் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு

சென்னை:
தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் 5-ந்தேதி தாக்கல் செய்யப்பட்டது. அமைச்சர் மரிய வல்சன் தாக்கல் செய்தார். அதனை தொடர்ந்து இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அமைச்சர் வினோத் இதனை தாக்கல் செய்தார்.
வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
காளான் வளர்ப்பினை ஊக்குவிக்க கிராமப்புற இளைஞர்கள், பெண்களுக்கு 50 சிறிய அளவிலான காளான் உற்பத்திக் கூடங்கள் ரூ.50 லட்சம் நிதியில் அமைக்கப்படும். –
கடலோர மாவட்டங்களில் முன்னோடித் திட்டமாக நன்னீர் கிணறுகள் அமைத்து மிளகாய் மற்றும் கொத்தமல்லி சாகுபடிக்கு ரூ.49.4 லட்சம் ஒதுக்கீடு.
சிறு பால்பண்ணை அமைக்க ரூ.4.19 கோடி ஒதுக்கீடு. நீலகிரி விவசாயிகளுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்த தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் தரம் உயர்த்தப்படும். இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
நஞ்சில்லா வேளாண் முறைகளை ஊக்குவித்து விவசாயிகளின் விளைபொருட்களுக்கு சந்தை வாய்ப்புகளை உருவாக்க நீலகிரி மாவட்டம் ஊட்டியில் புதிய வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் செயல்படுத்தப்படும்; இதற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு.
கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களின் களப் பயிற்சிக்காக 6 புதிய பேருந்துகள் வாங்கப்படும். இதற்காக ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு-.
தஞ்சை மாவட்டம், சாக்கோட்டையில் ‘நம்மாழ்வார்’ பெயரில் ஒரு புதிய உயிர்ம வேளாண்மை பட்டயப் படிப்புக் கல்லூரி அமைக்கப்படும். இதற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு.
கியூ ஆர் கோடுடன் விதைச் சான்றிதழ் வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு. உழவர் சந்தைகள் புனரமைக்க ரூ.20 கோடி ஒதுக்கீடு விவசாயிகளுக்கு நேரடி விற்பனை மற்றும் நிறைவான வருமானத்தை உறுதி செய்ய ஏற்பாடு.
திருக்கோவிலூர், முசிறி, காரைக்குடி, தாராபுரம் மற்றும் கும்பகோணம் ஆகிய இடங்களில் ரூ.4.6 கோடி மதிப்பில் புதிய வேளாண்மைப் பொறியியல் விரிவாக்க மற்றும் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளது.
2 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 1000 மெ.டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு வசதிகள் ரூ.4.80 கோடி ஒதுக்கீடு.

நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 என்ற வாக்குறுதி என்னவானது?: எடப்பாடி பழனிசாமி கேள்வி

சென்னை,தமிழக வேளாண் பட்ஜெட் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு அவர்

தொலைநோக்கு பார்வையுடன் கூடியது பொது, வேளாண் பட்ஜெட்:- முதல்வர் விஜய் பாராட்டு

சென்னை:தமிழக முதல்வர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாட்டின் வளர்ச்சியை இலக்காகவும், மக்கள் நலனை

புதிய திட்டங்கள் எதுவும் இல்லை; வேளாண் பட்ஜெட் ஏமாற்றம்: பிரேமலதா விஜயகாந்த்

சென்னை:வேளாண் பட்ஜெட் குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், விவசாயிகளை

ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்கு நாடு முழுவதும் 19 ரயில் நீர் உற்பத்தி ஆலைகள் செயல்படுகின்றன

நாடு முழுவதும் அனைத்து முக்கிய ரயில்கள், ரயில் நிலையங்களில் குடிநீருக்கான ரயில் நீர்