சிறுவனை பாலியல் தொல்லை செய்து கொலை – உறவினர் கைது..

தர்மபுரி மாவட்டம் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள காட்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம். பொக்லைன் டிரைவர். இவருடைய மகன் மதியரசு (வயது 6). இவன் கடத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 16-ந்தேதி மாலை வீட்டின் அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளிக்கு சிறுவன் விளையாட சென்றான். ஆனால் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகனை உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் என பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அவர்கள் கிருஷ்ணாபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடி வந்தனர்.

இந்த நிலையில் அந்த பகுதியில் பயன்பாடு இல்லாத மேல்நிலை குடிநீர் தொட்டியில் மதியரசு பிணமாக கிடப்பது நேற்று தெரிய வந்தது. இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசுபாதம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது சிறுவனின் கழுத்தில் காயம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், சிறுவனை உறவினர் ஒருவரே பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 6 வயது சிறுவனை ஐஸ்கிரீம் வாங்கி தருவதாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறுவனின் உறவினரான 18 வயதான பிரகாஷ் என்பவர் போக்சோ மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். செல்போனை தராததால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக முதலில் தகவல் வெளியான நிலையில், திடீர் திருப்பமாக பாலியல் தொல்லை தந்து கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. சிறுவனின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து தொட்டியில் வீசி சென்று உள்ளார். இது தொடர்பாக பிரகாஷ் கைது செய்யப்பட்டு உள்ளார். இதனிடையே, சிறுவனை ஒருவர் மட்டும் கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கூட்டாகத்தான் கொலை செய்திருக்க வேண்டும் என கூறி கிருஷ்ணாபுரம் போலீஸ் நிலையம் முன்பு சிறுவனின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.