சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கியது பட்டினி போராட்டம்….

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் 72 மணிநேர பட்டினி போராட்டம் சென்னை சேப்பாக்கத்தில் இன்று தொடங்கியது. காலமுறை ஊதியம் நிர்ணயிக்க வேண்டும். ஓய்வூதியம் ரூ.9000 வழங்க வேண்டும். 52 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்பவேண்டும், சத்துணவு மையங்கள் மூலம் காலை உணவு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெறுகிறது. இன்று முதல் 29-ந்தேதி வரை 4 நாட்கள் உணவு உட்கொள்ளாமல் தண்ணீர் மட்டுமே குடித்து போராட்டத்தை கொண்டுசெல்ல திட்டமிட்டுள்ளனர். போராட்டத்துக்கு மாநில தலைவர் ஆர்.கலா தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் மலர்விழி, மாநில துணைத் தலைவர்கள் பேயத் தேவன், பெரியசாமி, அண்ணாதுரை, தமிழரசன், மஞ்சுளா, வாசுகி, ஜெயந்தி, மாநில செயலாளர்கள் கற்பகம், சுமதி, மகேஸ்வரி, பாண்டிச்செல்வி, லதா, நிர்மலா ஜெஸி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய தொழிற்சங்க மைய பொதுச்செயலாளர் ஜி.சுகுமாரன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். நிர்வாகிகள் வாசுகி, சுகந்தி சீனிவாசன், சரவணத்தமிழன், சாம்ராஜ், ஸ்ரீதரன் உள்ளிட்ட பலர் வாழ்த்தி பேசினார்கள். அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் அன்பரசு கலந்துகொண்டு பேசுகிறார். போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சத்துணவு அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் குறித்து மலர்விழி கூறியதாவது:-

காலை முறை ஊதியம், ஓய்வூதியம், காலி பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டினி போராட்டத்தை தொடங்கி உள்ளோம். தேர்தல் கால வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும். இந்த போராட்டத்தால் பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவு வழங்குவதில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. சமையலர்கள், உதவியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். 72 மணிநேரம் பட்டினியாக இருந்து எங்கள் பிரச்சனையை அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்வதே இந்த போராட்டத்தின் நோக்கம். அரசு எங்களை அழைத்து பேசி எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். என்று கூறினார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.