இந்திய அரசமைப்புச் சட்டத்தை வழங்கிய பாபாசாகேப் அண்ணல் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் 134-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, நாளைகாலை 10.30 மணியளவில் சென்னை கடற்கரை சாலை, துறைமுகத்திற்கு அருகில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை, மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். தொடர்ந்து காலை 11.00 மணியளவில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இந்நிகழ்வுகளில் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் முன்னிலை வகிக்கவுள்ளார்கள்.
இந்நிகழ்வுகளில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், மாநில காங்கிரஸ் நிர்வாகிகள், முன்னணி அமைப்புகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
எனவே செய்தி நிறுவனத்தின் நிருபர், புகைப்படக் கலைஞர் / தொலைக்காட்சிக் குழுவினரை அனுப்பி வைத்து உதவிடுமாறு பத்திரிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றார் துணைத் தலைவர் கோபண்ணா

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு