மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரியில் நேற்று (10.07.2023) நடைபெற்ற 28-வது இளங்கலை மருத்துவப் பட்டமளிப்பு விழாவில் மாணவ, மாணவிகளுக்கு மருத்துவர் பட்டங்களை வழங்கினார்கள். உடன், மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன், சேலம் அரசு மோகன் குமாரமங்கலப் மருத்துவக் கல்லூாரி மருத்துவமனை முதல்வர் மரு.மணி ஆகியோர் உள்ளனர்.