சென்னை:
மத்திய அரசை கண்டித்து சென்னையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தமிழ்நாட்டில் பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டல பூமியான டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்க ஏல ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டு தமிழ்நாட்டின் விவசாயத்தை முற்றாக அழித்து பாலைவனமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மத்திய அரசை கண்டித்தும், தமிழக ஆளுனரின் சர்வாதிகார போக்கை கண்டித்தும், தமிழர்களுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்திவிட்டு இன்று சென்னைக்கு வரும் பிரதமருக்கு எதிராகவும் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் அதன் நிறுவனத் தலைவர் வேல்முருகன் தலைமையில் சென்னை சைதாப்பேட்டை கலைஞர் வளைவு அருகே இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்றவர்கள் கட்சி கொடியுடன் கருப்பு கொடியை ஏந்தியபடி கண்டன கோஷங்களை எழுப்பினர். பிரதமர் இன்று சென்னை வருகை தர உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேல்முருகன் உள்பட போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சைதாப்பேட்டை காவல் துறையினர் மதியம் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் வாகனங்களில் அழைத்துச்சென்று சைதாப்பேட்டை அப்துல் ரசாத் தெருவில் உள்ள எஸ்.பி.எஸ். திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.
பாதுகாப்பு பணியில் சைதாப்பேட்டை உதவி ஆணையர் கிறிஸ்டியன் ஜெயசீல் தலைமையில் 4 ஆய்வாளர்கள் முன்னிலையில் 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர் ஈடுபட்டிருந்தனர். பிரதமர் மோடியின் நிகழ்ச்சிகள் முடிவடைந்த பிறகு இவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

16 சட்டமன்றத் தொகுதிகளின் பல்வேறு தேர்தல் பணிகளின் ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்,
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளின்





