ஜூலை 12-ம் தேதி வரை அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவலை நீதிமன்றக் நீட்டித்து உத்தரவு…..

அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை அடுத்த மாதம் ஜூலை 12-ம் தேதி வரை நீட்டித்து சென்னை அமர்வு முதன்மை நீதிபதி உத்தரவிட்டார்.

இன்றுடன் செந்தில் பாலாஜியின் 14 நாள் நீதிமன்ற காவல் முடிகிறது. இதனைத் தொடர்ந்து, சென்னை அமர்வு முதன்மை நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் காணொலி வழியாக செந்தில் பாலாஜி இன்று ஆஜரானார். ஆஜரான அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நீதிபதி அல்லி உடல் நலம் விசாரித்தார். உடல் நலம் குறித்த விசாரித்த நீதிபதியிடம் அறுவை சிகிச்சையினால் சற்று வலி உள்ளது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை அடுத்த மாதம் ஜூலை 12-ம் தேதி வரை நீட்டித்து நீதீபதி எஸ்.அல்லி உத்தரவிட்டார்.

முன்னதாக, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது அரசு இல்லத்தில் அமலாக்கத் துறையினர் கடந்த 14-ம் தேதி அதிகாலை கைது செய்தனர். அப்போது நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லும்போது, அவர் நெஞ்சு வலிப்பதாகக் தெரிவித்ததால், அண்ணா சாலையில் உள்ள அரசு ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கபட்டார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனையில், இதயத்துக்குச் செல்லும் முக்கிய ரத்தக் குழாய்களில் அடைப்பு இருப்பது தெரியவந்ததால், அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவர்களும் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினர்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி கேட்டுக் கொண்டதால், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த 15-ம் தேதி ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். மருத்துவர்கள் ஏற்கெனவே திட்டமிட்ட படி, செந்தில் பாலாஜிக்கு கடந்த 21-ம் தேதி பைபாஸ் அறுவை சிகிச்சை நடந்தது.

அறுவை சிகிச்சைக்குப் பின் செந்தில் பாலாஜியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த 24-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி தனி அறைக்கு மாற்றப்பட்டார். இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜி இன்னும் 2 வாரங்களுக்கு மருத்துவக் கண்காணிப்பில் இருக்க வேண்டுமென்று மருத்துவர்கள் அறிவுருத்தியுள்ளனர்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.