தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை குறைய வாய்ப்பு – மத்திய அரசு…

புதுடெல்லி: மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் இருந்து வரத்து அதிகரிப்பதால் வரும் காலங்களில் தக்காளி விலை குறையும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே நாடு முழுவதும் பரவலாக தக்காளி விலை கடுமையாக அதிகரித்து வருகிறது. சில்லறை விற்பனையில் தக்காளி விலை சராசரியாக ஒரு கிலோ ரூ.200 முதல் ரூ.250 வரைக்கு விற்பனையானது. பருவமழை, கர்நாடக மாநிலம் கோலாரில் தக்காளி பயிர்களை பாதித்த ஒயிட் ஃப்ளை நோய் மற்றும் இன்னபிற காரணங்களால் விலை தொடர்ச்சியாக ஏறி வந்தது.

இந்நிலையில் தக்காளி விலை உயர்வு குறித்து மாநிலங்களவை உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு மத்திய நுகர்வோர், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே எழுதுபூர்வமாக அளித்த பதிலில், “மகாராஷ்டிராவின் நாசிக், நார்யாண்காவோன், அவுரங்காபாத் பகுதிகள் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் இருந்து தக்காளி வரத்து அதிகரிப்பதால் தக்காளி விலை படிப்படியாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது தக்காளி விலை உயர்வால் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இதனால் இன்னும் அதிகமாக தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுவார்கள். அப்போது சந்தையில் தக்காளி வரத்து அதிகரிக்கும். இது விலையில் ஒரு சமநிலையை ஏற்படுத்தும்” என்றார்.

படிப்படியாகக் குறையும் விலை: அதேபோல் கடந்த 10 ஆம் தேதி முதலே தக்காளி விலை படிப்படியாகக் குறைவதாக அவர் கூறினார். ஜூலை 10 முதல் 16 ஆம் தேதி டெல்லி, பஞ்சாப், சண்டிகர், அந்தமான் தீவுகளில் தக்காளி கிலோ ரூ.150க்கு விற்பனையானது. ஜூலை 18-ல் இப்பகுதிகளில் சராசரி விலை ரூ.130 ஆக்க குறைந்தது. ஜூலை 20ல் த்க்காளி விலை சராசரியாக ரூ.80 முதல் ரூ.70 வரை விற்பனையானது.

தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்தி மக்களுக்கு அது நியாயமான விலையில் கிடைக்க ஏதுவாக மத்திய அரசு அதனை கொள்முதல் செய்யத் தொடங்கியுள்ளது. அதனை மானிய விலையில் மக்களுக்கு வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் இழப்பை மத்திய, மாநில அரசுகள் 50:50 விகிதத்தில் பகிர்ந்து கொள்கிறது என்று அமைச்சர் விளக்கினார்.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்

சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை; தயார் நிலையில் 90 நீரகற்று மோட்டார்கள்

சென்னை:சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் தேங்கும் இடங்கதை கண்டறிந்து மழை நீரை

தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டா போட்டவர்கள் எல்லாம் நல்ல நடிகர்கள் கிடையாது: அ.ராசா முதல்வர் விஜய் மீது சாடல்

சென்னை:மிசா குறித்த முதலமைச்சர் விஜய்யின் பேச்சையும், உருவ கேலியையும் கண்டித்து தமிழ்நாடு முழுவதும்

மதுராந்தகரம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தவெக தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

சென்னை:மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் தேர்தல்

இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை:தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை தொகுதிகளில்

பார்களாக மாறிவிட்டதா சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகம்? ஆங்காங்கே தென்படும் மதுபாட்டில்கள்; உடனடி நடவடிக்கை பாயுமா?

சென்னை:சென்னை சைதாப்பேட்டை அரசு பொது மருத்துவமனை 6 அடுக்கு மாடியில் செயல்பட்டு வருகிறது.