தக்காளி விலை சரிவு – சாலையோரம் கொட்டப்பட்டும் தக்காளி

திருப்பூர் :
விலை குறைவால் உடுமலை பகுதியில் சாலையோரம் தக்காளி வீசப்படுகிறது. தக்காளி சாகுபடி உடுமலை பகுதியில் ஆண்டு முழுவதும் பல்வேறு பட்டங்களில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிலவிய கடும் வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறை, காலநிலை மாற்றம் காரணமாக தக்காளி சாகுபடி பரப்பளவு குறைந்ததோடு, உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் தக்காளியின் விலை விண்ணை எட்டும் அளவுக்கு உயர்ந்து கிலோ ரூ.180-க்கும் மேலாக விற்பனையானது. அதைத் தொடர்ந்து ஏராளமான விவசாயிகள் தக்காளி சாகுபடிக்கு திரும்பினார்கள். அதன் பயனாக உற்பத்தியும் அதிகரித்தது. இதனால் அதன் விலையும் படிப்படியாக குறைந்து தற்போது ரூ.15 வரையிலும் விற்பனை ஆகிறது. விற்பனை மந்தமடைந்து உள்ளதால் பழுத்த தக்காளியை சரியான இடைவெளியில் பறிக்க முடியாத நிலையில் உள்ளது. இதனால் சில விவசாயிகள் சாலையின் தக்காளியை கொட்டி செல்கிறார்கள..

இதனால் தக்காளியில் உலர்பவுடர், சாஸ், ஜாம், தொக்கு, ஊறுகாய், ஜூஸ் என பல்வேறு பொருட்கள் தயாரித்து அதன் மூலம் இழப்பை சரி செய்ய முடியும். அதுமட்டுமின்றி குளிர் பதன கிடங்கு அமைத்து தக்காளியை பாதுகாத்து பயன்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும். இதனால் திடீர் விலை உயர்வால் பொதுமக்களும் பாதிப்பு அடைய மாட்டார்கள். விவசாயிகளின் வாழ்வாதாரமும் காப்பாற்றப்படும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் சட்டமன்ற தொகுதி, காந்தலூர் பஞ்சாயத்து வார்டு 11 திண்டுகொம்பில், வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், கழக வெற்றி வேட்பாளர் திரு மகேந்திரன் அவர்களை ஆதரித்து,

கேரள மாநில உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட கழக

ராமநாதபுரம் அருகே கீழக்கரையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 5

12.12.2025. கடைசி நாள்

இந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனத்தில் Junior Executive வேலைவாய்ப்பு! சம்பளம்: Rs.40,400