சென்னை: சென்னை கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் சண்முகராஜா தெருவை சேர்ந்தவர் பாலசுப்ரமணி. இவர் நேற்று இரவு குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த தனது மகன் ஜெபரீசிடம் சகோதரி பற்றி ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜெபரீஷ் தந்தை பாலசுப்பிரமணியை வீட்டில் இருந்த கிரிக்கெட் மட்டை மற்றும் செங்கல்லால் கொடூரமாக தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த பாலசுப்ரமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கிண்டி போலீசார் விரைந்து வந்து பாலசுப்பிர மணி உடலை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய ஜெபரீசை போலீசார் கைது செய்தனர். போலீஸ் விசாரணையில் ஜெபரீஷ் வேலை இல்லாமல் சுற்றி திரிவதை தந்தை பாலசுப்ரமணி தட்டி கேட்டு அடிக்கடி தகறாரில் ஈடுபட்டதும் விசரணையில் தெரிய வந்தது.

நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
லண்டன்:தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நேற்று (12.9.2026) இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார்






