தமிழ்நாட்டில் உள்ள வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் தீரன் திருமுருகன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுவாமிநாதன் அமர்பு முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, அரசாணைப்படி பெயர் பலகை வைக்காததற்காக ரூ.50 அபராதமாக வசூலிக்கப்படுகிறது.
அபராத தொகையை உயர்த்தி வசூலிக்கும் திட்டம் அரசின் ஒப்புதலுக்காக உள்ளது. கடந்த 2018-2022 வரை 6,074 கடைகளில் ரூ.4.58 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சட்டத்தை முறையாக பின்பற்றி அவ்வப்போது ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது எனக் கூறினார்.
இதற்கு மனுதாரர் தரப்பில் ரூ.50 அபராதம் 1948ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இதை தற்போதைய நிலைக்கு ஏற்ப உயர்த்த வேண்டும். அபராதம் செலுத்திவிட்டு பெயர் பலகையில் மாற்றம் செய்வதில்லை எனக் கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், அபராதம் போமானதல்ல. தீவிரமான நடவடிக்கையும் தேவைப்படுகிறது. எனவே, அபராதத்தை உயர்த்தி வசூலிக்கவும், தொடர்ந்து ஈடுபடுவோர் மீது தீவிர குற்ற நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அரசின் தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கையளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை 4 வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு