சென்னை:
தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் சென்னை மாவட்ட பணியாளர்களின் கலந்தாய்வு கூட்டம் வடசென்னை விஜய் மினி மகாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சென்னை மாவட்ட தலைவர் வி.டி.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். செயலாளர் விநாயகமூர்த்தி முன்னிலை வகித்தார். மாநில தலைவர் ஜி.ராஜேந்திரன், திருச்சி ஒருங்கிணைப்பாளர் தங்க பூமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். நாம் கோ கிரோஷர்குமார் நன்றி உரையாற்றினார்.
கூட்டத்தில், பணி மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும். கொரோனா காலத்தில் பணியாற்றியதற்காக ஊக்கத்தொகையாக குடும்ப அட்டை ஒன்றுக்கு 50 பைசாவை உடனடியாக வழங்க வேண்டும். ஆய்வு நடத்தும்போது அதிகாரியின் செல்போனுக்கு வரும் தகவல்களை பணியாளர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இதில் சென்னை மாவட்டத்தை சேர்ந்த திரளான சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு