தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்?:

சென்னையில் 40 லட்சம் பேரில் 10 லட்சம் பேரின் வாக்குரிமை பறிபோகும் அபாயம்;

தேர்தல் ஆணையம் நடவடிக்கை

✍️. சென்னை: எஸ்.ஐ.ஆர் குளறுபடிகள் காரணமாக, தமிழக வாக்காளர் பட்டியலில் இருந்து 85 லட்சம் பேர் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில் தெரியவந்துள்ளது.

இது தமிழகத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

🔘. இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு, மேற்குவங்கம் உள்பட மொத்தம் 9 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்.ஐ.ஆர் (வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்) பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டு, அந்த பணிகள் நடைபெற்று வருகிறது.

🔘. முதல்கட்டமாக பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக நடத்தப்பட்ட எஸ்.ஐ.ஆர் பணிகளில் பல குளறுபடிகள் மற்றும் சர்ச்சைகள் ஏற்பட்டது. இதனையடுத்து நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டார்.

🔘. இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து, அத்துடன் பல்வேறு இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சார்பாக ஆர்ப்பாட்டங்கள் நடந்தது. இருப்பினும் தமிழகத்தில் உள்ள வாக்காளர்கள் நலன் கருதி திமுக சார்பில் எஸ்.ஐ.ஆர் பணிகளில் மக்களுக்கு உதவும் வகையில் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். அத்துடன் திமுக சார்பில் சட்ட ரீதியாக வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது. அதேவேளையில் அதிமுகவும் பாஜவும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

🔘. அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது, பொது மக்களிடமும் எஸ்.ஐ.ஆர் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் மற்றும் கேள்விகள் எழுந்துள்ளன. பல்வேறு குழப்பங்களுக்கு நடுவில் தமிழகத்தில் கடந்த மாதம் முதல் இந்த பணி தொடங்கியது. டிசம்பர் 4ம் தேதி வரை எஸ்.ஐ.ஆர் பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. வாக்காளர்கள் படிவத்தை பூர்த்தி செய்வதில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, இப்பணிக்கான கால அவகாசம், வரும் 11ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

🔘. குறிப்பாக, இந்த பணிகளில், பிஎல்ஓக்களின் பயிற்சியின்மை, ஆன்லைன் பிரச்னை, போதிய தகவல் இல்லாத காரணத்தினால் மக்கள் குழப்பியுள்னர். இதன் மூலம் ஏழை, சிறுபான்மை, பட்டியலின மக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர், அவர்களிடம் பழைய ஆவணங்கள் இல்லாதது, ஆதார் இணைப்பு குறைவாக இருப்பதால் மக்கள் தங்கள் வாக்கை இழக்கும் நிலையில் உள்ளனர்.

🔘. வாக்காளர்களும், விண்ணப்பத்தில் கேட்டுள்ளபடி 2002ம் ஆண்டு வாக்கு செலுத்திய விவரங்களை பெற முடியாமல் குழப்பத்தில் மூழ்கியுள்ளனர். பல்வேறு குழப்பத்தில் எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை தமிழகத்தில் கொடுக்கப்பட்ட படிவத்தில் “சேகரிக்க முடியாத” (uncollectible) படிவங்களின் எண்ணிக்கை 84.91 லட்சமாக உள்ளது என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் வரும் 16ம் தேதி அன்று வெளியிடப்பட இருக்கும் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து கிட்டத்தட்ட 85 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

🔘”தற்போதைய வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் மொத்தம் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில் 13.24 சதவீதம் பேர் இந்த “சேகரிக்க முடியாத” பிரிவில் வந்துள்ளனர்.

நேற்று முன்தினம் வெளியிட்ட தகவல்படி, 84.91 லட்சத்தில் அதிகபட்சமாக 44.22 லட்சம் பேர் “நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள்” (Permanently Shifted) என்றும், 26.18 லட்சம் பேர் “இறந்தவர்கள்” என்றும் (Deceased), 10.73 லட்சம் பேர் “இல்லாதவர்கள்” (Absent) என்றும், 3.5 லட்சம் பேர் “ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டவர்கள்” (Already Enrolled – Duplicate) என்றும் தற்காலிகமாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

🔘. மாவட்ட வாரியாக குறைந்தபட்சமாக அரியலூரில் வெறும் 4.3 சதவீதம் (23,000) மட்டுமே சேகரிக்கப்படாமல் உள்ளது. ஆனால் தலைநகர் சென்னையில் அதிர்ச்சி தரும் வகையில் 40.05 லட்சம் வாக்காளர்களில் 31.78 சதவீதம் (12.73 லட்சம்) அதாவது மூன்றில் ஒரு வாக்காளர் படிவம் சேகரிக்கப்படாத நிலை உள்ளது. செங்கல்பட்டில் 20.7 சதவீதம் (5.78 லட்சம்) படிவங்கள் சேகரிக்கப்படாமல் உள்ளன.

தேர்தல் ஆணையம் இதுவரை “விநியோகிக்கப்பட்ட படிவங்கள் 99.45 சதவீதம் (6.38 கோடி), டிஜிட்டல் ஆக்கப்பட்டவை 94.32 சதவீதம் (6.05 கோடி) என்று கூறி வந்தது. ஆனால் உண்மையில் சேகரிக்கப்பட்டு உண்மையாக டிஜிட்டல் ஆக்கப்பட்ட படிவங்கள் 82.57 சதவீதம் (5.29 கோடி) மட்டுமே என்பது தற்போது தெரியவந்துள்ளது. மீதமுள்ள 13.24 சதவீதம் “சேகரிக்க முடியாத” படிவங்களையும் டிஜிட்டல் ஆக்கப்பட்டவை என்று சேர்த்துத்தான் 95.81 சதவீதம் என்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலில் தெரியவந்துள்ளது.

🔘. இதுதொடர்பாக தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது: 82.57 சதவீதம் படிவங்கள் மட்டுமே உண்மையில் டிஜிட்டல் ஆக்கப்பட்டுள்ளன, இவர்களது பெயர்கள் வரைவு பட்டியலில் இடம்பெறும். மீதமுள்ளவர்களின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளது. சென்னையில் “நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள்” எண்ணிக்கை அதிகமாக இருப்பதற்கு நகர விரிவாக்கமும் வேகமான நகரமயமாக்கலுமே காரணமாக உள்ளது.

பணிகள் நடைபெற்று வருவதால், இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றும், டிசம்பர் 11ம் தேதிக்கு பிறகே இறந்தவர், இடம்பெயர்ந்தவர், இல்லாதவர், நகல் போன்ற காரணங்களுடன் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும். வரைவு பட்டியலில் யாராவது பெயர் நீக்கப்பட்டாலும், இறுதி பட்டியலுக்கு பிறகு ஜனவரி வரை ஒரு மாதம் ஆட்சேபனை தெரிவித்து, அவர்கள் பெயரை சேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தார்கள்.

யூடியூப் பார்த்து நாட்டுத் துப்பாக்கி தயாரித்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டார்

பாலகுரு தனது வீட்டின் அருகே உள்ள விளைநிலங்களில் அணில் வேட்டையாடுவதற்காக, யூடியூப் வீடியோக்களைப்

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி கேத் லேப் மற்றும் உயர் தொழில்நுட்ப சிடி ஸ்கேன் திறந்து வைக்கப்பட்டது

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கேத்

வீட்டுமனைப் பாட்டாக்களை மாண்புமிகு தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்இன்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில்பெருநகர

கொல்கத்தாவில் வளர்ச்சித் திட்டங்களின் துவக்க விழாவில் பிரதமர்

ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களே, மத்திய அமைச்சர்கள் சாந்தனு தாக்கூர் அவர்களே,  சுகந்தா மஜும்தார் அவர்களே, மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர்  சுபேந்து அதிகாரி அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் சமிக் பட்டாச்சார்யா அவர்களே, இதர மக்கள் பிரதிநிதிகளே, தாய்மார்களே, அன்பர்களே,இன்று, கொல்கத்தாவின் மண்ணிலிருந்து, மேற்கு வங்கம் மற்றும் கிழக்கு இந்தியாவிற்கான வளர்ச்சியின் புதிய அத்தியாயம் எழுதப்படுகிறது. சுமார் 18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சாலை, ரயில்வே மற்றும் துறைமுக உள்கட்டமைப்புத் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்கள் மேற்கு வங்கம் மற்றும் கிழக்கு இந்தியாவிற்கு புதிய உத்வேகத்தை அளிக்கும், வர்த்தகம் மற்றும் தொழில்துறையை மேம்படுத்தும், லட்சக் கணக்கான மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதுடன், அவர்களுக்குப் புதிய வாய்ப்புகளை வழங்கும். கரக்பூர்-மோரேகிராம் விரைவுச் சாலைப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும். துப்ராஜ்பூர் புறவழிச்சாலை மற்றும் காங்ஷாபதி மற்றும் ஷிலாபதி ஆறுகளின் மீது கட்டப்படும் பெரிய பாலங்கள், இணைப்பை மேலும் மேம்படுத்தும். இந்தத் திட்டங்களுக்காக மேற்கு வங்கம் மற்றும் கிழக்கு இந்திய மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நண்பர்களே,இன்று, நாட்டில் ரயில்வேயை நவீனமயமாக்குவதற்கான ஒரு விரைவான பிரச்சாரம் நடந்து வருகிறது. இந்தப் பிரச்சாரத்தில் மேற்கு வங்கம் பின்தங்கியிருக்கக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்! எனவே, மேற்கு வங்கத்தின் ரயில்வே உள்கட்டமைப்பை விரிவுபடுத்த மத்திய அரசு வலுவான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இன்று, கலைகுண்டா மற்றும் கனிமஹுலி பிரிவுகளில் தானியங்கி தொகுதி சமிக்ஞை அமைப்பு நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது பரபரப்பான ரயில் பாதைகளின் திறனை அதிகரிக்கும், பயணத்தை பாதுகாப்பானதாக்கும், மேலும் பயணிகளுக்கு வேகத்தையும் வசதியையும் அதிகரிக்கும்.நண்பர்களே,இன்று, காமாக்யா குடி, அனாரா, தம்லுக், ஹால்டியா, பரபும் மற்றும் சியுரி ஆகிய ஆறு நிலையங்கள் அம்ரித் நிலையங்களாகப் புனரமைக்கப்பட்டு, திறந்து வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையங்களில் வங்கத்தின் சிறந்த கலாச்சாரம் இப்போது இன்னும் பிரகாசமாக மிளிர்கிறது. இங்கு மேலும் பல நிலையங்களும் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு வருகின்றன. புருலியா மற்றும் ஆனந்த் விஹார் முனையத்திற்கு இடையே ஒரு புதிய எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவை மேற்கு வங்க மக்களுக்கு மட்டுமல்ல, ஜார்க்கண்ட், பீகார், உத்தரப்பிரதேசம் மற்றும் டெல்லி மக்களுக்கும் பயனளிக்கும்.சாலை மற்றும் ரயில் இணைப்பு போலவே, துறைமுகங்கள் மற்றும் நீர் போக்குவரத்தும் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. பல தசாப்தங்களாக, இந்த விஷயத்தில் கிழக்கு இந்தியாவின் ஆற்றல் புறக்கணிக்கப்பட்டது. ஆனால் இன்று, நீர்வழிகள் வர்த்தகம் மற்றும் தொழில்துறை முன்னேற்றத்திற்கான புதிய பாதைகளைத் திறக்கின்றன. இந்த திசையில், முக்கியமான துறைமுக உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன, நிறைவடைந்தவை, தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. கொல்கத்தா மற்றும் ஹால்டியா போன்ற துறைமுகங்கள் நீண்ட காலமாக கிழக்கு இந்தியாவில் முக்கிய வர்த்தக மையங்களாக உள்ளன. ஹால்டியா கப்பல்துறை வளாகம் இயந்திரமயமாக்கப்பட்டு வருகிறது. இது சரக்கு நடவடிக்கைகளை விரைவுபடுத்தும், துறைமுக திறனை அதிகரிக்கும் மற்றும் வர்த்தகத்திற்கான புதிய வசதிகளை உருவாக்கும். கொல்கத்தா கப்பல்துறை அமைப்புமுறையில் உள்ள பாஸ்குல் பாலத்தின் புதுப்பித்தல் பணியும் நடைபெற்று வருகிறது. கிதர்பூர் கப்பல்துறையில் சரக்கு கையாளும் திறனை அதிகரிப்பதிலும் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். இந்த திட்டங்கள் அனைத்தும் கிழக்கு இந்தியாவின் தளவாட அமைப்பை வலுப்படுத்தும்.நண்பர்களே,சாலைகள், ரயில்வே மற்றும் துறைமுகங்கள் தொடர்பான இந்தப் புதிய திட்டங்கள் மேற்கு வங்கத்தின் நவீன எதிர்காலத்திற்கான புதிய பாதைகளைத் திறக்கின்றன. விவசாயிகள், வர்த்தகர்கள், தொழில்முனைவோர், மாணவர்கள் அனைவரும் பயனடைவார்கள். சுற்றுலா போன்ற துறைகளிலும் புதிய வாய்ப்புகள் உருவாகும். உள்ளூர் தொழில்கள் மற்றும் சேவைகள் வேகம் பெறும். இந்தியாவை எப்போதும் வழிநடத்தி வரும் மேற்கு வங்கம், ‘வளர்ச்சியடைந்த மேற்கு வங்கமாக’ மீண்டும் அந்த பெருமையை அடைய வேண்டும் என்பதே எங்கள் உறுதி. வலுவான இணைப்பு மற்றும் நவீன உள்கட்டமைப்பு ஒரு வளர்ந்த மாநிலத்தின் அடித்தளத்தை உருவாக்கும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். இந்த விருப்பத்துடன், இந்த வளர்ச்சித் திட்டங்களுக்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போது, இந்த அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி முடிவடைந்தவுடன், மாநில மக்கள்  கூடியிருக்கும் திறந்தவெளி மைதானத்திற்குச் செல்வேன். மேற்கு வங்க மக்களைச் சந்தித்து அவர்களிடையே மிக முக்கியமான பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கும் பாக்கியம் எனக்குக் கிடைக்கும். 

பி.கே.சேகர்பாபு திரு.வி.க.நகர் மண்டலத்தில் கட்டப்பட்ட பல்நோக்கு மையக் கட்டடத்தில் உள்ள நியாய விலைக் கடையினைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்வழிகாட்டுதலின்படி,இன்று மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும்,சென்னைப்