தஞ்சாவூர்:
“தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் நாளை (15.03.2023) தஞ்சை மாவட்டம் – செங்கிப்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
தமிழ்நாடு அரசுப் பணிகள் 100 விழுக்காடு தமிழர்களுக்கே வழங்கச் சட்டம் இயற்ற வேண். காலிப் பணியிடங்களை நிரந்தர ஊழியர்களைக் கொண்டு நிரப்ப வேண்டும். இந்திய அரசுத்துறைப் பணிகளில் 90 விழுக்காடு தமிழர்களுக்கே வழங்க வேண்டும்.
தனியார் துறையில் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கே வழங்க வேண்டும். தொழில் உரிமையாளர்களுக்குத் தேவையான தொழிலாளிகளை வழங்குவதற்குத் தமிழ்நாடு அரசு வேலை வழங்கு வாரியத்தை நிறுவி தொழிலாளர்களைத் தர வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை மாவட்டம் – செங்கிப்பட்டியில், சாணூரப்பட்டி முதன்மைச்சாலையில் நாளை (15.03.2023) மாலை 5 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பூதலூர் ஒன்றியச் செயலாளர் பி. தென்னவன் தலைமை தாங்குகிறார். பொதுக்குழு இரெ. கருணாநிதி, க. காமராசு ஆகியோர் முன்னிலை வகிக்கிறார். பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் நா. வைகறை, தலைமைச் செயற்குழு பழ. ராசேந்திரன், க. விடுதலைச்சுடர் உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர்.
நிறைவில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கையை விளக்கி உரையாற்றுகிறார்.

காசி தமிழ் சங்கமம்
காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு